காலங்கள் கடந்தப் பின்னும் காற்று முதுமையினை துறப்பதில்லை யுகங்கள்...
காலங்கள் கடந்தப் பின்னும்
காற்று முதுமையினை துறப்பதில்லை
யுகங்கள் மாறியப் பின்னும்
கனி சுவையினை இழப்பதில்லை
உயரத்தில் ஓங்கி இருந்தும்
விண்மீன்கள் போலினை இழப்பதில்லை
மரண வாசல் அருகில் இருந்தும் மரணம் என்றுமே
அமரர்களை நெருங்குவதில்லை
கவி அமரன் அகனாரை என்றும்
பூக்களும் வாழ்த்த மறந்ததில்லை ...
குன்றாத வாழ்வு உம் பயணத்தில்
கங்கையாய் பிறக்கும்
குறைவில்லா இன்பமோ
உம்மை உறவாய் அணைக்கும்
புகழின் உச்சத்திலே
உம் வாழ்வு தொடரும்
உம் எழுத்தின் பயணத்தால்
தாங்கள் இன்று எங்களுக்கு பிதாமகன்
தரணியில் பிறந்ததால்
கவிக்கு தாங்களும் தலைமகன் .......
தோல்விகளுக்கும் சுகத்தை தந்த
சொர்க்க வாசியின் செல்லமகன்
இலக்கணங்களுக்கு உயிர் ஊட்டும்
இயற்கையின் இடை மகன்
எண்ணத்தின் ஓட்டத்தில் ஈரெழு உலகத்திற்கும்
தலைவன் இவன்
அய்யனே .....இந்நாளிதான்
அன்று உன் தாய்மடியில் தவழ்ந்தாழோ ......
இன்றும் நீவீர் குழந்தைதான் உம் தாயின் பார்வையில்
என்றும் நீவீர் குழந்தைதான் கவித்தாயின் பார்வையில்
இன்பத்தின் வாசத்தை அன்பு நூலில் சூடி மிக விரைவிலே அனுப்பிவிட்டேன்
பெற்றுக் கொள்வீராக உம் எழுதுகோலின் முத்தத்தில் ....
வாழ்க வாழ்க வாழ்க .........நல் வளமுடனே ..... குன்றாத வளமுடனே .....