உழைப்பாளிகளின் தினத்தில் முதலாளிகளுக்கு எதற்கு விடுமுறை.? --- கொஞ்சமாய்...
உழைப்பாளிகளின் தினத்தில்
முதலாளிகளுக்கு
எதற்கு விடுமுறை.?
---
கொஞ்சமாய் நாளை
உறிஞ்சப்படலாம்
உங்களின் உழைப்பு
எங்களின் மேதின
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில்.!
காணத்தவறாதீர்.
-----
ஆடையை மாற்றிக்கொண்டிருந்த
அந்த நடிகையின்
நிர்வாணத்தை பதிவுசெய்தவனும்
உழைப்பாளியாம்.
இனி
எரிமலை எப்படி வெடிக்கும் ?
------------
செங்கொடி ஏந்திய தோழர்கள்
நாளை போகும் ஊர்வலத்திலும்
ஆதிக்கச்சூரியன்
இரத்தம் உறியலாம்.
இரகசிய வானிலை அறிக்கை..!
--
மே தின வாழ்த்துகள்.
-வியன்.