மழை நனையாப் பாலையொன்றின் மண் அளைந்த வறள் காற்று......
மழை நனையாப்
பாலையொன்றின்
மண் அளைந்த
வறள் காற்று...
முழைத்தறியா
உலர் விதையின்
மௌனத்தை
மொழி பெயர்த்து..
களை இழந்த
கானகத்தின்
கிளை உதிர்த்த
இலை வருடி..
பழி உணராப்
பாழ் வெளியின்
பசுமை செத்த
துயர் சுமந்து..
விளைவறியா
வேய்ங் குழலின்
துளை நுழைந்து
இசை சமைத்து..
வெகு தூரத்தே
ஒலிக்கிறது
துயரத்தின்
பாடலொன்றை...