ஆழியிலே முத்தெடுக்க ** ஆசையுடன் நான்விரைந்தேன் ஆர்ப்பரிக்கும் அலைகளுடன்...
ஆழியிலே முத்தெடுக்க
** ஆசையுடன் நான்விரைந்தேன்
ஆர்ப்பரிக்கும் அலைகளுடன்
** அனுதினமும் உருக்குலைந்தேன்
நாழிகைகள் நாட்களாக
** நாட்களுமே மாதமாக
நாற்புறமும் தேடுகிறேன்
** நடந்துசெல்லப் பாதையில்லை
நீந்துவது(உ) பாயமதை
** நேசித்துக் கற்கவில்லை
நீர்முகந்து வழிசமைக்க
** நீலக்கடல் விடுவதில்லை
காய்ச்சீரில் கவியெழுதி
** கவலைதனை மறந்திடவோ
கார்திகேயன் அருளையெண்ணி
** காலமிதைக் கடந்திடவோ
*** மீ.மணிகண்டன் ***
06-May-15