எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

விருகம்பாக்கம் to வேளச்சேரி - ப்ரியன் கிழக்கு இன்று...

விருகம்பாக்கம் to வேளச்சேரி - ப்ரியன்

கிழக்கு இன்று
மேற்க்கானது
வாசல்

அருகிலிருந்தும்
தூரமாய் தோன்றும்
கடைவீதிகள்

பார்வைபடயிருந்தும்
பக்கத்து வீட்டுக்காரருக்கு
தெரியாதவனாகிறேன்

இன்னும் எத்தனையோ
இடம் புலம்பெயர்ந்ததால்
என்னுள்
புரிந்துகொண்டேன்

ஒருவயதாகுமென்
பாலகன்மட்டும்
கண்விழித்து கட்டிலிறங்கி
மருட்சியில் நிற்க்கிறான்
இயல்பு புரியாமல்

பதிவு : ப்ரியன்
நாள் : 10-May-15, 10:47 am

மேலே