எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அம்மா வென்று அழைத்து பதினஞ்சு வருஷமாகுது...! விளையாட்டு பருவத்தில்...

அம்மா வென்று அழைத்து
பதினஞ்சு வருஷமாகுது...!

விளையாட்டு பருவத்தில்
தாயை இழந்ததால்
தெரியாமல் போன
தாயருமை...!

காலச் சக்கரம் உருளலில்
தாயில்லா நிலை
ஊசியாய் குத்துகிறது!

என்றாவது! யாரோட
வீட்டிலாயாவது
தாய் பாசம் மிளிரும் காட்சிகள்!
விழியோரத்தை ஈரமாக்கும்!

குடும்பத்தில் கடைசியாக
சாப்பிடும் அம்மாவின்
கடைசி கவளம்! இந்த
கடைகுட்டிக்குதான் சொந்தம்!

இன்னும் எத்தனையோ
விலைமதிப்பிலா காட்சிகள்!
நிழலாடுகிறது! இன்றும்!

அம்மாவின் நினைவுகளோடு...

நாள் : 10-May-15, 5:45 pm

பிரபலமான எண்ணங்கள்

மேலே