எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

2014 ல் ஒருநாள்... இரவு முழுக்கப் பயணித்து அந்த...

2014 ல் ஒருநாள்... இரவு முழுக்கப் பயணித்து அந்த ஊருக்கு போய் சேர்ந்தேன்.. இரவு முழுவதும் பயணம் செய்ததாலோ என்னமோ ஒரு மாதிரி கொலைப் பசி..... பாக்கப் போற மனுசர் ரொம்ப முக்கியமானவர்... அதனால வயித்துப் பசியோட மூளையும் சேந்து பசிக்குது.... பசியோடவே குளிச்சிட்டு அறையில் படுத்துருக்கப்ப மனுசர் வந்தார்.. பேசினோம்.. கொஞ்சம் பசி அடங்குனுச்சி... அப்பறமா வீட்டுக்கு போனோம்...

கௌ....................? ஒரு நெடிய அதே நேரம் மென்மையான அழைப்பு..... அம்மா வந்தாங்க... அழைச்சாங்க.. வேற எதுவும் பேசலை... நேரா சாப்பாடுதான்... சாப்ட அப்பறமா எல்லாத்தையும் பேசிக்கலாம்ன்னு சொன்னாங்க...

சாப்டுக்கிட்டே பேசிட்டு இருந்தோமா....! இடையிடையே.. கௌ............!! அழைப்புகளுக்கு என்ன தேவையோ அது சரியா சாப்பாடு மேசைக்கு வந்துக்கிட்டே இருந்தது.....! எல்லாமே வந்துட்டே இருந்தது.... கேக்காமலேயே... காதுக்குள்ள ஒலிச்ச மென்மையான தமிழ் மாதிரியே... தட்டுல வச்ச இட்டிலியும் சட்டினியும் ............... இப்படியான நிறைந்த ஒரு புரிதல் இருக்கற தம்பதிகள் அவர்கள்...

இன்று திருமணநாள் கொண்டாடும் எந்தை திரு. அகன் அவர்களுக்கும் எந்தாயி.. கௌ.. அம்மாவுக்கும் என்னோட வணக்கங்களும் வாழ்த்துக்களும்...!!

பதிவு : கட்டாரி
நாள் : 20-May-15, 7:20 am

மேலே