எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திரு.அகன் சார் அவர்களின் திருமண நாளான இன்று, அன்பினால்...

திரு.அகன் சார் அவர்களின் திருமண நாளான இன்று, அன்பினால் "கீதாஞ்சலி " யின் ஒரு கவிதையை மொழிபெயர்த்து சமர்ப்பிக்கிறேன்..!
***************************************************************************************************************

"நீ உன் திருப்பாதங்களை பதித்திருக்கும் இடம்..
வறியவர்களும், மிக தாழ்ச்சியுற்றவர்களும், திக்கற்றவர்களும்
நிறைந்த இடத்தில் இருப்பதால்..
உன்னை வணங்கிட ..
நான் எத்தனிக்கும் போதெல்லாம் ..
இத்தகையோர் நிறைந்திருக்கும்
அந்த அளவு தாழ்வு பகுதியினை
என்னால் அடைந்திட முடிவதில்லை ..!

எளிமையே வடிவாக ..
நீ உலவிடும் இவர்களின் நடுவில்..நின்றிருக்கும் உன்னை
எனது செருக்கினால் அணுகிட முடியாது ..

துணையேதும் இல்லாத இவர்களுக்கு ..
சாய்வதற்கு தோளாக ..
தன்முனைப்பற்ற தோழனாக நீ ..
இருக்கும் இடம் நோக்கி செல்லுகின்ற பாதையை ..
செருக்குற்ற மனம் கொண்டு
எந்நாளும் என்னால் கண்டுபிடிக்கவும் இயலாது.."

அன்புடன்..
ச.கருணாநிதி
Original verse from Gitanjali (10) by Rabindranath Tagore:
******************************************************************
Here is thy footstool and there rest thy feet where live the poorest, and lowliest, and lost.
When I try to bow to thee, my obeisance cannot reach down to the depth where thy feet rest among the poorest, and lowliest, and lost.
Pride can never approach to where thou walkest in the clothes of the humble among the poorest, and lowliest, and lost.
My heart can never find its way to where thou keepest company with the companionless among the poorest, the lowliest, and the lost.

பதிவு : கருணாநிதி
நாள் : 20-May-15, 9:26 am

மேலே