காலை நாளோடு ஊடக காட்சிகளில் வாழ வர மறுத்த...
காலை நாளோடு
ஊடக காட்சிகளில்
வாழ வர மறுத்த
கணவன் குடும்பத்தை
எரித்தே கொன்றாளாம்
மதுரை அருகே
பாண்டீஸ்வரி-
இந்த பயங்கரம்
அரங்கேற
அவளை காரணமாக்கியது
காதலா-
இல்லவே இல்லை
வாழ்வதை வாசிப்புக்கும்
பார்வைக்கும்
கொடுக்காத
ஊடக செய் தீ
விளையாட்டின்
போட்டி
பாவம் யாரிங்கே
கொல்லப்பட்டவர்களா
கொன்றவளா
தினமும்
கெட்டதையே
செய்தியாக்கியோரும்
வாழ்வை காதலாக்காமல்
காதலை வாழ்வாக்காமல்
கொலையே காதல்
காதலித்தலே கொலைக்காக
வழி காட்டிகளின்
திசை தவறும்
தசை வேட்கையும்
ஒரு வ ழி பயணம்