எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோழர்களுக்கு வணக்கம். ! பதிவு / எண்ணம் என்கிற...

தோழர்களுக்கு வணக்கம். !

பதிவு / எண்ணம் என்கிற பெயரில் கண்டப்படி தப்பு தவறுமாக தமிழ் மொழியை கொலை செய்யாதீர். தயவு செய்து .. தயவு செய்து மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.

தப்பு தப்பாய் வீம்புக்கு
மொழியை களங்கப்படுத்தமாட்டான்.
உப்பு போட்டு சாப்பிடும் தமிழன்.

வேண்டுமென்றே எழுத்துகளை தப்பு தப்பாக தட்டச்சு செய்து.. தனக்கு ஒன்றும் தெரியாத போல நடிக்க வேண்டாமே.

புனைப்பெயரோ.. போலி பெயரோ... இயற்பெயரோ . எதுவோ ஒன்று அதில் நற்கருத்துகளையும். நல்ல நல்ல படைப்புக்களை வாரி வழங்க வாரீர் தோழர்களே.

வெறுமனே பொறாமைக்குப்பைகளை அள்ளி வீசி வீசி என்ன சாதிக்கப்போகிறீர்கள் ??

குறிப்பு. : இந்த வியன் எனும் நான் கூட தளத்திலிருந்த ஒரு உறுப்பினரின் மாற்றுப்பெயர் தான். யாரென்று தெரிவிக்க விரும்பவில்லை. அதற்கான அவசியம் இல்லை. என்றாலும் எனது இந்த பெயரில் யாருக்கு எவ்வித தொந்தரவும் எம் தமிழ் மொழிக்கு எவ்வித களங்கமும் ஏற்படுத்தியதில்லை.


நன்றி. !

பதிவு : வியன்
நாள் : 23-May-15, 5:54 pm

மேலே