எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தாய் ===== ஆயிரம் உதடுகள் உன்னை அம்மா என்றாலும்...

தாய்
=====
ஆயிரம் உதடுகள் உன்னை
அம்மா என்றாலும்
என் அழைப்பில் உன்னை மறந்தவளே...

உன் உதிரத்தை பாலாக்கி
எனக்கு உயிர் கொடுத்தவளே....

பெண்மையின் உன்னதம் தாய்மை.
எனவேதான் போற்றப்படவேண்டியவற்றை
உன் பேர் சொல்லி அழைகின்றனரோ!!
தாய்நாடு, தாய் மண், தாய் மொழி,
தாய்மணிக்கொடி என்று.....

என் எல்லா தவறுகளையும்
மன்னிக்கும் ஒரே நீதிபதி நீதான்!!!!
உன்னை நான் புண்படுத்தினாலும்
உன் புன்னகையையே பரிசாகத் தருகிறாய்!!!!

கடவுளின் இடத்தை
நீ நிரப்ப முடியும்.
ஆனால் எந்த கடவுளாலும்
உன் இடத்தை நிரப்ப முடியாது....

மறுபிறவி என்கிறார்களே!!
அப்படி ஒன்று இருந்தால்
நான் உனக்கு தாயாகி
நீ எனக்கு சேயாக வேண்டும்....
அய்யகோ! அப்படி ஒன்று இல்லையென்றால்???
யோசித்துக்கொண்டே காணிக்கையாக்குகிறேன்
என் அன்பை
இன்றும்....
என்றும்...
என்றென்றும்...
உன் அன்புக்கு கடுகளவுக்கு ஈடாகாது
என்றாலும்....
இதைக் கூட கொடுக்க மறுக்கிறதே பல இதயங்கள்
இல்லை இல்லை அவை எல்லாம் வெறும் கருங்கற்களே....

பதிவு : ராஜ்52
நாள் : 28-May-15, 10:39 pm

மேலே