இது என் வாழ்க்கை நினைவுகள் முதல் முறையா எழுத்து...
இது என் வாழ்க்கை நினைவுகள் முதல் முறையா எழுத்து பகுதியில் எண்ணங்களை என்னுடைய பேச்சு வழக்கில் பதிவேற்றுகிறேன் தவறுகளை பொறுத்து சுட்டிகாட்டவும் நன்றி .
என் முதல் தீண்டல் ... :'(
அன்று முழு நிலவு நாள் (என்)அவள் நினைவுகள் என்னை முழுதும் ஆட்கொண்டது . ஆம் எல்லாம் காதலின் மாயம்.
....எப்படில்லாமோ உருண்டு பெரண்டு படுத்தாலும் தூக்கமே வரல . அதுக்கு காரணம் அவ(என்னவள்) தான் அவள பாக்கனும் போல இருந்துச்சி ,பாத்தா. பேசுவாளா இல்ல ஏசுவாளா உள்ளூற பயம் , இருந்தாலும் போகலாமானு மனசு ஏங்கலா கேட்கவும் புத்தியும் சரினு ஒத்து வந்துச்சி. காலையில நேரமே கெளம்பி மாட்டுதாவணி வந்து அங்க இருந்து திருநெல்வேலி போலாம்னு யோசிச்சுட்டே தூங்கிட்டேன். விடிய முன்ன எழும்பிட்டேன் அப்புறம் தான் கம்பெனி நெனப்பு வந்துச்சி முதலாளிக்கு போன் போட்டு திருநெல்வேலி மார்கெட்டிங் போறதா சொல்லிட்டேன் . நெனச்ச மாதிரி திருநெல்வேலி வந்து இறங்கி வேலை முடிச்சு கம்பெனிக்கு ரிப்போர்ட் குடுத்துட்டு அவள (என்னவள்) பாக்க கெளம்பினேன் .
அவளோட நெனப்பு ஏதோ பன்னுச்சி எப்படி இருப்பா? கருப்பா செவப்பா ? குட்டையா நெட்டையா ? சிரிப்பாளா இல்ல மொறைப்பாளா ? என்ன பேசறது ஏது பேசறது இப்படி யோசனைலே அவளோட கடைக்கு 2 கிமீ நடந்தே போயிட்டேன் . அவளுக்கு 7.00 மணிக்கு தான் வேலை முடியும் , மணி 6.00 தான் ஆச்சு
அவள(என்னவள்) பத்தி யோசனைல நேரம் போனதே தெரில . அவ கடைக்குள்ள போனேன் ரீசார்ஜ் பன்னனும்னு சொன்னேன் முதலாளி அவகிட்ட (என்னவள்) நம்பர் கொடுக்க சொன்னார் சரினு ,
அங்கே போய் அவள (என்னவள்)பாத்து என்னோட போன் நம்பர் சொல்லும் போதே அவளோட முகம் செவக்க ஆரம்பிச்சுது.
ஆமா அவளும் நானும் முதல் தடவையா பாக்குறோம் . என்னவள் முகம் வெக்கத்தில செவந்து அழகா
தெரிஞ்சா .
என்னவள் வெளியே வந்தாள் தலை குனிஞ்சுட்டே அழகா தேவதை போல நடந்து வந்தா என் 25 வருஷ தவத்துக்கு கடவுள் குடுத்த வரமா தான் எனக்கு தெரிஞ்சா .
என்னவள விரும்ப ஆரம்பிச்ச 8 மாசத்தில போன்ல மணிக்கணக்கா பேசிக்குவோம் இப்போ தான் முதல் முதலா அவள பாக்குறேன் ,
அவளோட போன்ல பேசி பழகினதால சகஜமா பேசிட்டேன் என்னவள் ரொம்ப வெக்கப்பட்டா அழகா பேசிட்டே வந்தா என்னவள் .
வீடு வரைக்கும் வர்றதுக்கு சம்மதம்னு சொன்னாள் அப்போ தான் அந்த தப்பு நடந்துச்சி
அவளோட தோள்ல கைது வச்சி என்னோடு சேர்த்து நடந்து போக முயற்சி பன்னேன். என்னவள் கைய எடுத்துவிட்டு பொது இடம் இப்படிலாம் போக கூடாதுனு சொன்னா , நானும் பாவமா. மன்னிப்பு கேட்டுகிட்டேன். அவளும் சிரிச்சுகிட்டே வீட்டுக்குள்ள ஓடிட்டா. நானும் கெளம்பி மதுரை வந்துட்டேன்