#kalaignar92 இவரை மறந்து எவரும் அரசியல் நடத்தியதில்லை. இவரை...
#kalaignar92
இவரை மறந்து எவரும்
அரசியல் நடத்தியதில்லை.
இவரை தவிர்த்து எந்த
அரசியலும் பேசப்படுவதில்லை.
தமிழினத்தலைவர் என்றே
தமிழர்கள் அவ்வப்போது
தலையில் தூக்கியதும் உண்டு
தரையில் உருட்டியதும் உண்டு
யாரிவர் ..? இவர்
திருவாரூர் முத்துவேலர் கருணாநிதி.
திராவிட முன்னேற்ற கழகத்தலைவர்
தமிழக முன்னாள் முதல்வர்
இதுமட்டுமல்ல இவரின் தகுதி...!
கவிஞர், சிறுகதையாசிரியர்
கட்டுரையாளர், வசனகர்த்தா
திரைப்பட பாடலாசிரியர்
திரைக்கதை எழுத்தாளர்
கார்ட்டூனிஸ்ட்,ஓவியர்
பத்திரிக்கையாளர்
வரலாற்று புதினங்கள்
எழுதிய திறமைசாலி !
பலநூறு நூல்களின்
படைப்பாளி!
இளமையூறும் இலக்கிய
திறனாளி !
இவரின் இந்த தகுதியே -அவர்மீது
நான் கொண்ட அன்புமிகுதி.
நம்மை போன்ற மனிதர்களுக்கு
ஏதோ ஒரு அரைக்கோள
மூளையே மேன்மையாகுமாம்
முத்தமிழ் அறிஞர் கலைஞருக்கோ
தமிழ் திறமை வலது மூளை
ஆட்சி ஆளுமை இடது மூளை
இதுவரை எதுவும் பழுதில்லை.
பிரமித்து பேசுகிறது
மருத்துவ நரம்பியல் துறை.
------------------
தமிழ் வேறு அல்ல
கலைஞர் வேறு அல்ல -இவர்
இலக்கிய வேர் விட்டு
மொழி கிளை பரப்பியவர்.
துளியளவும் நினைவுத்திறன் மங்கியதில்லை.
டைரிக்குறிப்பு என்று இவர் எழுதியதில்லை.
நொடியில் பல கோடி தகவல்கள் திரட்டி -
எந்த கணினியும் இவரிடம் வென்றதில்லை.
எழுதுகோல் “மை” வியர்வை சிந்தி
செங்கோல் ஆட்சி பிடித்த மாயவன்
ஒலிவாங்கியில் இவர் உரையாடினால்
சட்டமன்றத்தை கவிமன்றமாக்கும் மந்திரன்.
”என் உயிரினும் மேலான உடன்பிறப்பே ”
என்றே இவர் திருவாய் மலர்ந்தாலே
மக்கள் வெள்ளம் அலைப்பாயும்
கடலலை நின்று கைத்தட்டும்
கைக்குழந்தையும் விசிலடித்து மகிழம்
கரகரக்கும் இவர் கணீர் பேச்சு -இன்னும்
இந்த வயதிலும் இவர் வசமாச்சு.
”கோயில் கூடாது என்பது அல்ல
கொடியவரின் கூடாரமாக கூடாது.”
இதுப்போன்ற எண்ணற்ற
வசனங்கள் சாட்டையெடுத்து
சுழற்றியது -மூடநம்பிக்கையெனும்
வானரங்கள் நாட்டை விட்டு ஓடியது.
மறக்க முடியுமா? நம்மால்
மறக்கத்தான் முயல முடியுமா?
ஒய்வறியா சூரியனே...........!
விமர்சனங்களை கண்டு
அஞ்சாத அஞ்சுகம்மாள் மகனே!
வானுயர்ந்த திருவள்ளுவச்சிலை
படைத்த திருவாரூர் கோமகனே..!
கலைஞனே.. கவிஞனே...!
என் தமிழ் காதலனே........!!!
நின் திறன் கண்டு
தலைவணங்குகிறேன்....!
என் தலைவனே....!
வாழ்க....! வாழ்க.......!!
--------------------------------------------------------------------
கடுஞ்சொல் வீசுவோர் வீசட்டும்
கதிரவனே..! நீ பட்டொளி வீசு...!
காட்சிகள் மாறும் இந்த
பட்சிகளின் அட்டுழியம் தெரியும்- அன்று
பேசும் இந்த தமிழினம்...!
கலைஞர் கலைஞர் தான் என்று...!
முதியவன் நீ மாண்டால் போதும்- அரசியல்
திண்ணை நீ விட்டால் போதுமென்றே
அலைந்து திரிகிறது அசிங்கங்கள்..!
அதுகள் அப்படித்தானே தலைவா...!
திமிர்ப்பிடித்த பறவைகள்
பறக்கத்தெரியும் என்றே
சூரியனுக்குள் பறக்கத் துடிக்கிறது. அது
வெந்து மடியத்தானே போகிறது
நீ நிம்மதியுடன் இரு.. தலைவா .!
நீ வாழ்க ...........! வாழ்க..........!
----------------------------------------------------------------------------
-இரா.சந்தோஷ் குமார்.
#மீள்பதிவு .