காதல் கிசுகிசுவில் சிக்கிய அதர்வா-ப்ரியாஆனந்த்! பாணா காத்தாடியில் சமந்தாவுடன்...
காதல் கிசுகிசுவில் சிக்கிய அதர்வா-ப்ரியாஆனந்த்!
பாணா காத்தாடியில் சமந்தாவுடன் நடித்த அதர்வா, அதன்பிறகு அமலாபால், வேதிகா ஆகிய நடிகைகளுடனும் நடித்தார். ஆனால், அப்போதெல்லாம் எந்த நடிகைகளுடனும் அவரை இணைத்து கிசுகிசுக்கள் பரவியதில்லை. மாறாக, அவருடன் ஒரு படத்தில்கூட நடிக்காத ஜனனி அய்யருடன் காதல் செய்திகள் பரவியது.
அதையடுத்து இப்போது முதன்முறையாக இரும்புக்குதிரையில் நடித்த ப்ரியாஆனந்துடன், காதல் கிசுகிசுவில் சிக்கியிருக்கிறார் அதர்வா. இருவரும் ரொமான்ஸ் காட்சிகளில் துளிகூட செயற்கைத்தனம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தினார்கள். நிஜ காதலர்களை தவிர மற்றவர்களால் இந்த அளவுக்கு ரொமான்ஸ் பண்ண நிச்சயமாக முடியாது என்று தற்போது ஒரு செய்தி கோடம்பாக்கத்தில் உலவிக்கொண்டிருககிறது.
ஆனால், இதுபற்றி சம்பந்தப்பட்ட ப்ரியாஆனந்திடம் கேட்டால், பெரிதாக ஒன்றும் ஷாக் கொடுக்கவில்லை. மாறாக, என்னடா கொஞ்ச நாளா எந்த கிசுகிசுவும் காணலையேன்னு பார்த்தேன், வந்தாச்சா... என்று எந்த ரியாக்சனும் காட்டாமல் கேசுவலாக இந்த விசயத்தை கிண்டல் பண்ணினார். சினிமாவில் நடிக்கிறபோது, அது நடிப்பு என்று தெரியாமல் ரியலாக இருக்க வேண்டும். அதனால்தான் எந்தவொரு காட்சியாக இருந்தாலும் அதுவாகவே மாறி நடிக்கிறோம். அப்படித்தான் நானும், அதர்வாவும் இரும்புக்குதிரை படத்திலும் நடித்திருக்கிறோம் என்கிறார்.
மேலும், நாங்கள் இருவருமே சினிமாவில் வளர்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதால், எங்கள் திறமையை காட்ட கிடைக்கிற சந்தர்ப்பங்களை நல்லமுறையில் பயன்படுத்திக்கொண்டு வருகிறோம். அப்படித்தான் இந்த படத்திலும் ரொமான்ஸ் காட்சியில் நிஜமாகவே பிரதிபலித்தோம். ஆனால், கேமராவுக்கு வெளியே நாங்கள் நல்ல நண்பர்கள். அதை மீறி எங்களுக்கிடையே எதுவும் இல்லை. அதனால் தவறான கற்பனைகளுக்கு இடம் கொடுக்காமல், இந்த விசயத்தை இத்தோடு விட்டுவிடுங்கள் என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிறார் ப்ரியாஆனந்த்.