எல்லோருடைய வாழ்க்கையும் ஆட்டோகிராப் நிறைந்தது .. அது பலர்...
எல்லோருடைய வாழ்க்கையும் ஆட்டோகிராப் நிறைந்தது ..
அது பலர் நினைப்பதில்லை..
பலர் அதை பற்றி நினைக்க நேரம் ஒதுக்குவதில்லை...
அம்மா என்று ஆசையோடு நாடிசென்ற குழந்தை பருவம்..
அப்பாவை எதிர்பார்த்து காத்துகொண்டிருந்த நேரம்..
ஆசிரியர் அடிக்கப்போகிறார்கள் அவர்கள் இன்று விடுமுறை எடுத்து கொள்ள வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிய நேரம்,
பாட்டு பாடி , ஆட்டம் ஆடி சிறுவயதில் பரிசுபெற்ற நேரம் ..
தங்கையை கையில் தூக்கி சென்ற நேரம்...
உறங்கும் போது எதையோ கண்டு பயந்து எழுந்திருக்கும் போது அம்மா அரவணைத்த நேரம்..
அப்பா கடைக்கு செல்லும் போது அது இது என்று அவரிடம் வாங்கிவர கேட்ட நேரம் ..
அப்பா அடிக்கும் போது அம்மா வந்து தடுத்த நேரம்...
இதைப்போல் வாழ்க்கையில் பல சூழ் நிலையில் பலருடன் செலவு செய்த நேரம்...
கட்டுமர படகில் கடலின் மைய்யப்பகுதிக்கு சென்று வானத்தில் உள்ள நட்சத்திரத்தை பார்த்து இதையெல்லாம் யோசிக்கும் பொழுது உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ஆட்டோகிராப் உண்டு என்பது புரியும் அப்பொழுதுதான் நீ மனிதனா இல்லை மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறாயா என்பது புரியும்...
வாழ்க்கை படகு காற்றடிக்கும் திசையில் செல்வதல்ல..
நீ உன் வாழ்க்கை படகை எப்படி ஓட்டி சென்றிருக்கிறாய் என்பது புரியும்...
சில இடத்தில் புயல்.
சில இடத்தில் அமைதி..
சில இடத்தில் தத்தளிப்பு..
சில இடத்தில் தடுமாற்றம்..
சில இடத்தில் முயற்சி.
சில இடத்தில் பலன்...
நினைத்து நினைத்து வாழ்ந்தாலே..
நீ யார் எனபது புரியும்..
உன் நிலையை உன்னால் மாற்ற முடியும்...
நினைவில்லாமல் மனிதன் இல்லை...
நீ நினைக்காமல் எதுவும் உனக்கு நடப்பதில்லை...
நினைவுகளை காதலிப்போம் ..
நிஜத்தில் வாழ்வோம்...
தமிழர்களுக்கும்..
தமிழ் உள்ளங்களுக்கு...
இனிய காலை வாழ்த்துக்கள்...