தென்னிந்திய நடிகை ஆர்த்தி அகர்வால், உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்....
தென்னிந்திய நடிகை ஆர்த்தி அகர்வால், உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார்.
நடிகை ஆர்த்தி அகர்வாலுக்கு சமீபகாலமாக சுவாசக்கோளாறு பிரச்னை இருந்துவந்தது. பிரச்னை தீவிரமானதை தொடர்ந்து அவருக்கு ஆபரசேன் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டநிலையில், அவர் மரணமடைந்தார்.
தெலுங்கில், நுவு நாக்கு நசாவ் படத்தின் மூலம் அறிமுகமான ஆர்த்தி அகர்வால், சிரஞ்சீவி, நாகார்ஜூனா என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான நுவுலேகா நேனுலேனு, இந்திரா, பாபி, வசந்தம் மற்றும் அடாவி ராமுடு உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
தமிழில், ஸ்ரீகாந்த் நடித்த பம்பரக்கண்ணாலே படத்தில் ஆர்த்தி அகர்வால் நடித்திருந்தார்.
இவரது நடிப்பில் உருவான ரணம் 2 படம், நேற்று (ஜுன் 05ம் தேதி) தான் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
2005ம் ஆண்டில், சக நடிகர் கொடுத்த தொந்தரவின் காரணமாக, ஆர்த்தி அகர்வால், தற்கொலைக்கு முயன்று, பின் உடல்நிலை தேறியிருந்தது நினைவிருக்கலாம்.
ஆர்த்தி அகர்வாலின் மறைவிற்கு, சமந்தா, நானி, சந்தீப் கிஷான், விமலா ராமன் உள்ளிட்டோர் இரங்கற்செய்தியை வெளியிட்டுள்ளனர். அதேபோல், அவரது ரசிகர்களும் சமூகவலைதளங்களில், இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.