மங்கள்யான் விண்கலத்தில் இருந்து இன்று முதல் 15 நாட்கள்...
மங்கள்யான் விண்கலத்தில் இருந்து இன்று முதல் 15 நாட்கள் தகவல் கிடைக்காது
செவ்வாய் கிரகத்தை சூரியன் மறைப்பதால் இன்று முதல் 15 நாட்களுக்கு மங்கள்யான் விண்கலத்தில் இருந்து நமக்கு தகவல் கிடைக்காது.
குறைந்த செலவிலான மங்கள்யான் விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறு வனம் (இஸ்ரோ) கடந்த 2013-ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி விண் ணுக்கு அனுப்பியது. மங்கள்யான் 9 மாத பயணத்துக்குப் பிறகு செவ்வாயை அடைந்தது. பின்னர் செவ்வாய் சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அங்கிருந்தபடியே செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொண்டு தகவல்களையும் படங்களையும் அனுப்பி வருகிறது.
இந்நிலையில் இன்று முதல் வரும் 22-ம் தேதி வரை செவ் வாயை சூரியன் மறைக்கிறது. இதனால் மங்கள்யானில் இருந்து பூமிக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்படும்.
இதுகுறித்து இஸ்ரோ மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, “மங்கள்யான் ஏவப்பட்ட பிறகு இதுபோல் நீண்ட காலத்துக்கு (15 நாட்கள்) தகவல் தொடர்பு தடைபடுவது இதுவே முதல்முறை. இந்தக் காலத்தில் உரிய முடிவுகளை மங்கள்யான் சுயமாக எடுக்கும். 15 நாட்களுக்குப் பிறகு மங்கள் யானை மீண்டும் நமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முடியும்” என்றார்.
மங்கள்யானில் எரிபொருள் கூடுதலாக இருந்ததால், அதன் ஆயுட்காலம் கடந்த மார்ச் மாதம் 6 மாதங்களுக்கு நீட்டிக் கப்பட்டது. இந்நிலையில் மங்கள் யானின் ஆயுட்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படு மானால், அடுத்த ஆண்டு மே மாதம் சூரியனுக்கும் செவ்வாய்க் கும் இடையில் பூமி வரும்போது, இதுபோன்று தகவல் தொடர்பு துண்டிக்கப்படும்.