எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நோபல் பரிசு உன் ஆரம்பம், போபால் கசிவு உன்...

நோபல் பரிசு உன் ஆரம்பம்,
போபால் கசிவு உன் ஆட்கொள்ளல்,
இப்படி
ஆக்கமாக ஆரம்பித்த நீ
உலகப்போரில் அழித்துவிட்டாய் நகரங்களை ..........

உன்னால் அழிவை பார்த்தவர்கள்
இன்று அமைதியாகி - உன்னை
அணைத்துகொண்டார்கள்...........

உன் சேர்மங்கள் தான்,
மண்ணில் உரமாகின,
மனிதனுக்கு மருந்தாகி
மரணத்தை மறுபரிசிலினை செய்தது,
விண்ணிலும் விதைத்தது
செயற்கை கோள்களை,

இப்படி
இன்று தாயின் கருவறை முதல்
கல்லறை வரை தொடரும்
கண்ணிற்கு தெரியும் கடவுள் -----வேதியல் ....
உன் விந்தைகள் தொடரட்டும் .........

பதிவு : மனிமுருகன்
நாள் : 18-Jun-15, 2:36 pm

மேலே