----இன்றைய கவிதை ---- குமுறும் குழந்தைத் தொழிலாளி ---BY...
----இன்றைய கவிதை ----
குமுறும் குழந்தைத் தொழிலாளி ---BY பழனி குமார்
பார்புகழ வாழ்ந்திட எண்ணமில்லை
--பாராமுகமாய் இருந்திட வேண்டாம் !
பாரினில் உள்ளவரை பசியின்றிவாழ
--பாவமறியா எனக்கும் உதவிடுங்கள் !
----பா வினைக் கொண்டு எழுதிய சமூக அவலப் பா.
பாக்களை கொண்டு பாமாலை பாடுவார்கள் . இலக்கியத்தில் நிறையவே
படித்திருக்கிறேன் . பா வினைக் கொண்டு சமூக அவல நிலையை மனதைத்
தொடும்படி எழுதப் பட்ட மிகச் சிறப்பான கவிதை
அருணகிரி தகரத்தை ( டின் இல்லை )வைத்து பாடியிருக்கிறார் படித்திருக்கிறேன்
இவர் பகரத்தை வைத்து ஏழையின் உதரத்திற்கு பா வடித்திருக்கிறார்
சமூக அக்கறை உள்ளவர்கள் மட்டும் படிக்கவும்
------கவின் சாரலன்