எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்வின் வசந்தத்தை வார்க்கிறேன் -------------------------------------------- வேகமாக கிடைத்திடும் உணவு...

வாழ்வின் வசந்தத்தை வார்க்கிறேன்
--------------------------------------------
வேகமாக கிடைத்திடும்
உணவு எல்லாம்
நீராகாரம்
போல வருமா!

நவீன ஊஞ்சலே
ஆனாலும்
அது என்
தாயின் சேலையில்
கட்டிய ஊஞ்சலுக்கு
நிகர் ஆகுமா!

குளு குளு AC
அறையில்
முகம் தெரியாதவர்கள்
உடன் புசிப்பதை காட்டிலும்
சிலு சிலுவென்று
அடிக்கும் காற்றில்
வெட்ட வெளி
பொட்டல் காட்டில்
நண்பர்கள் உடன்
அன்று
புசித்த கூட்டாஞ்சோறுக்கே
ருசி அதிகம்
அதை அறிவீரா...

நாள் : 8-Jul-15, 3:41 pm

மேலே