எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வேலை வாய்ப்பு காலை சிற்றுண்டியை வாயில் திணித்து சாப்பிடு...

வேலை வாய்ப்பு

காலை சிற்றுண்டியை வாயில் திணித்து
சாப்பிடு என்ற அம்மாவின் பிள்ளை பாசம்!...

வழக்கத்திற்கு மாறாக கூடுதல் சட்டை பை பணம்
கொடுத்து முதுகு தட்டிய அப்பாவின் பரிவு.

காலனியை சாய மெருகேற்றி துடைத்து,சான்றிதழ்
பையை பிடி என்ற தங்கையின் கனிவு.

இரண்டாயிரம் வினாடி காத்திருந்து ,காதலியிடம்
பூங்காவில் புன்னகைத்து பெற்ற வாழ்த்து,

இவை அனைத்திலும் மகிழ்ந்து,

இருபத்தி ஆறாவது நபராய் நேர்காணல் அறைக்குள்
நுழைந்து, நீண்ட உரையாடலுக்கு பின்
சலிக்க வைத்த அதே பழைய பதில்.
சிலதினங்களில் தொலைபேசியில் அழைக்கபடுவீர்..!

சாலையோர நடையில்,கைபேசி அழைப்பு,என்ன ஆச்சு
மறுபடியும் மொக்க வாங்கினியா,காதலியின் கேலித்தனமான பேச்சு.

முகம் சோர்ந்து வீடு திரும்ப,வீட்டு தாழ்வாரத்தில்
அமர்ந்து கிண்டலான சிரிப்புடன் வரவேற்ற தங்கை..

இந்த வேலை இல்லேன்னா என்ன இப்போ,இன்னும்
எத்தனையோ இருக்கு ஜெயிக்காமலா போய்டுவ,அப்பாவின் ஆறுதல்..

புள்ள பாவம் களச்சு போய் வந்திருக்கு என ஆவி பறக்க
தேநீரை குடிடா செல்லம்னு கொடுத்த அம்மாவின் உச்ச கட்ட பாசம்..

உணரட்டுமே தொழிற்கூடங்களும்,வணிக நிறுவனங்களும்,
அலைகழிபின்றி ஆள் எடுப்போம்மென்று.


இவண்

ஜெயப்பிரகாஷ் கண்ணன்
காஞ்சிபுரம்

நாள் : 10-Jul-15, 6:06 pm

மேலே