எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

'இந்திய மூளை' எங்கே போனாலும் வேலை செய்யும்..! ஒவ்வொரு...

'இந்திய மூளை' எங்கே போனாலும் வேலை செய்யும்..!

ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கு பின்னாடியும் ஒரு இந்திய மூளை இருக்கும், அதை பெரும்பாலான நாடுகள் ஒற்றுக் கொள்வதில்லை. இருப்பினும் இந்தியர்கள் மேதைகள் தான் என்பதற்கு மற்றுமொரு சான்று தான் - இந்த தண்ணீரை அடிப்படியாக கொண்ட கம்ப்யூட்டர்..! ஸ்டன்ஃபோர்ட் பல்கலைகழகத்தின் இந்திய வம்சாவளியை சேர்ந்த மனு பிரகாஷ் என்பவர், இரண்டு மாணவர்களோடு இணைந்து முழுக்க முழுக்க தண்ணீரால் இயங்க கூடிய கம்ப்யூட்டர் கிளாக் ஒன்றை வடிவமைத்துள்ளார். இதுவே உலகின் முதல் தண்ணீர் சார்ந்த கம்ப்யூட்டர் ஆகும்..! கம்ப்யூட்டர் என்றவுடன் வழக்கமான கம்ப்யூட்டர் போல் இருக்கும் என்று நினைத்து விடாதீர்கள். இது கம்ப்யூட்டரில் உள்ள தொழில்நுட்பத்தை போலவே கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு புதிய கருவியாகும். தண்ணீர் துளிகள் விழவிழ இயங்கும்படி உருவாக்கப்பட்டுள்ள இது, காந்தங்களின் உதவியையும் இணைத்துக் கொண்டு செயல்படுமாம். இது மட்டுமின்று பேப்பர் 'சிப்'தனை முதல் முதலில் கண்டுபிடித்த மாணவர் என்ற பெருமையையும் மனு பிரகாஷ் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..!

பதிவு : lathaponnarivu
நாள் : 11-Jul-15, 7:35 am

மேலே