எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அவசரத்திற்கு உதவாத பணம் ஆயிரம் ரூபாய் நோட்டாக இருந்தாலும்...

அவசரத்திற்கு உதவாத

அவசரத்திற்கு உதவாத பணம் ஆயிரம் ரூபாய் நோட்டாக இருந்தாலும் வெற்றுக் காகிதமாகத்தான் தோன்றுகிறது..!!

திறமை என்பது பொங்கி வரும் காட்டாற்று வெள்ளம் போன்றது அணைபோட்டு தடுத்தாலும் அணையை உடைத்துக் கொண்டு வெளியேறும்..!!

உயிருக்கு உயிரான நட்போ அல்லது உறவுகளோ பிரிந்து செல்லும்போது ஏற்படும் வலிகள் சுய நினைவினில் இருக்கும்போது விரலிலிருந்து நகத்தை நீக்கும்போது ஏற்படும் வலியை விட மிகக் கொடியது ..!!

நம்பிக்கையுள்ளவனாக நம்முடனேயே இருந்து கொண்டு நமக்கே குழி தோண்டும் நண்பர்களைப் போன்றவர்களை விட "என்ன.... சௌக்கியமா....??" என்று நக்கலாக நலம் விசாரிக்கும் எதிரி எவ்வளவோ மேல். .!!

கவலைகளின் போதெல்லாம் பொங்கி வரும் கண்ணீரோடு போட்டி போட்டுக் கொண்டு வந்து விழுகிறது கவிதைகள்..!!

பதிவு : C. SHANTHI
நாள் : 12-Jul-15, 9:16 pm

மேலே