அன்பு விண்ணூர்தியை மிஞ்சும் விரைவு உலகில் நிலையானது அன்பு...
அன்பு
விண்ணூர்தியை மிஞ்சும் விரைவு உலகில் நிலையானது அன்பு
பூக்களை மட்டுமல்ல புலன்களை திறப்பதும் அன்பு
வானவில்லிற்கே வர்ணம் தீட்டுவது அன்பு
தொலைதூர இதயங்களை தொலையாமல் இணைப்பதும் அன்பு
கலியுக வாழ்வில் கற்பனைக் கெட்டா காவியமானது அன்பு
எதிர்பார்பில்லாமல் ஏற்றத்தாழ்வுகளை தூளாக்குவதும் அன்பு
நில்லா பூமியை நிலையாய் கட்டி ஆள்வதும் அன்பு
உயிருள்ள ஜீவன்கள் அனைத்திலும் உறைந்திருப்பது அன்பு
நொடியில் செல்லும் மின்னஞ்சலை விட துடிப்பானது அன்பு