"பூக்களைத் தேடித்தான் வண்டினம் செல்லும் எந்தப் பூவும் வண்டினைத்...
"பூக்களைத் தேடித்தான் வண்டினம் செல்லும்
எந்தப் பூவும் வண்டினைத் தேடிச் செல்வதில்லை "
ஒருசொட்டு கள்ளது எங்கோ ஒருமூலையில் சிந்திக் கிடக்க எறும்புகள் எப்படி ஊர்ந்து வருகிறதோ அதைப் போலதான் அந்த கவிஞனின் கருவும் ,கவியும் ரசிகனை தன்பக்கம் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை ...
"விளம்பரம் தேவையான ஒன்றுதான் அது வியாபரத்திற்கும் விற்பனைக்கும் .சிந்தனையை விற்கும் எவரும் கவிஞர் என மார்தட்டிக் கொள்ள முடியாது "
"சமீப காலமாக இந்த எழுத்து தளத்தில் என் கவிதைக்கு வாக்கு அளியுங்கள் அளியுங்கள் என்ற அறைகூவல் அதிகமாக வருவது மிகுந்த வேதனை "
"ஒவ்வொரு வாக்கு வேண்டி விடுகையும் எனக்கு நம்மூர் அரசியல்வாதிகளை நினைவூட்டுகிறது என்றால் மிகையாகாது "
இந்த நிலை மாற வேண்டும் எழுத்து தளம் சிறக்க வேண்டும் அதுபோல விடுகை அனுப்பும் நபர்களின் கவிதையை தரமறிந்து இறுதி தேர்வு பட்டியலில் இடம் பிடித்து இருந்தாலும் அதை நீக்க தயங்க வேண்டாம் என்பது இந்த தமிழ் விரும்பியின் கனிவான வேண்டுகோள் .......