எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஐயா! அன்பு மனித நேசிகரே! அழைத்தானோ காலன் உம்மையும்.....

ஐயா!
அன்பு மனித நேசிகரே!
அழைத்தானோ காலன் உம்மையும்..

எங்கோ பிறந்து
எங்கோ வளர்ந்து
எங்கோ உயர்ந்து –எங்கள்
இதயத்தில் நிறைந்தீரே!

உங்கள் கனவுகள் எங்கள்
உலகினில் நிஜமாகும் - அதையும்
எங்கள் சுவாசத்தில் கலந்த
உங்கள் சுவாசத்தின் மூலம்
உணர்ந்தே காண்பீரே!

நல் வித்துக்களை எங்கள்
இதயத்தில் விளைத்தீர்- அந்த
வித்துக்கள் எல்லாம் நல்ல
முத்துக்களாய் முளைக்கும்
நாளினை காண்பீரே!

இயன்றதை செய்தீர்- நமது
தேசம் வளர்ந்திட –நல்
வழிகளை சொன்னீர்-இந்த
நாடும் உயர்ந்திட!
உணர்பவர் உணர்ந்தால் – உமது
கனவும் கைகூடும்- அதையும்
விரைந்தே செய்தால் –நமது
பாரதம் செழித்திடுமே!

மனிதராய் நீங்களும்
முடிக்காத பணிகளை –எங்கள்
ஆவியில் கலந்தேனும்
அரங்கேற்ற வேண்டுகிறோம் ஐயா!

வாழ்க! நின் புகழ் – இந்த
வையகம் உள்ளமட்டும்!

நாள் : 28-Jul-15, 8:00 pm

மேலே