எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திருமணம் முடிந்து சீதனமாக கொடுத்த காரில் ஏறுகிறாள் மணப்பெண்...

திருமணம் முடிந்து
சீதனமாக கொடுத்த காரில் ஏறுகிறாள் மணப்பெண் ...
காருக்குள் கால் வைக்கும் முன்
திரும்பி பார்க்கிறாள் ...
மகளை பிரியும் வேதனையை முகத்தில் காட்டாமல் மறைக்க முயன்று தோற்று நிற்கிறார் அப்பா .....
தங்கை போகிற இடத்தில் நன்றாக இருப்பாளா..... ?
"நல்லா இருக்கணும்" என்று உள்ளுக்குள் வேண்டியபடி அண்ணா ...
ஆனால் அவளுக்கு அங்கு தெரிந்தது என்னவோ....
சீதனம் கொடுக்க அப்பா செய்த தியாகங்களும்
அண்ணாவின் இரவு பகல் உழைப்பும் தான்,
கண்ணீர் திரையாக மறைக்க
திரும்பி காருக்குள் ஏற எத்தனிக்கிறாள் ,
இன்னும்மொருமுறை திரும்பி பார்க்க மனம் உந்த திரும்புகிறாள் ...
கலங்கிய கண்களுடன் தங்கையை பார்த்த அண்ணன்
இப்போது அருகில் "என்னாச்சுமா" என்ற முக பாவத்துடன் ,
"அண்ணா .....நீயாச்சும் வரதட்சணை வாங்காம கல்யாணம் பண்ணிக்கோ ....ப்ளீஸ் "

விம்மலுடன் தெளிவாக வார்த்தைகள் வந்து விழுந்தது ....!!

பதிவு : selvaravi87
நாள் : 3-Aug-15, 6:27 pm

மேலே