எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நாட்டுநடப்பு படைத்த பிரம்மனுக்கு ஒருநாள் சந்தேகம் ...நம்மிலும் பெரியவர்கள்...

நாட்டுநடப்பு

படைத்த பிரம்மனுக்கு ஒருநாள் சந்தேகம் ...நம்மிலும் பெரியவர்கள் இருக்கிறார்களா .......நாம் துரும்பை தூணாக்குவோம் தூணை துரும்பாக்குவோம் எறும்பை கரியாக்குவோம் கரியை பரியாக்குவோம் ...அப்பேற்பட்ட நம்மளைவிட பெரியவர்கள் யார் இருக்க முடியும்.....இந்த சந்தேகத்தை சிவனிடமே கேட்டுவிடுவோமென்று சிவனிடம் போய் நின்றார் பிரம்மன்...சிவன் அமைதியாக கண்ணை மூடிக்கொண்டே சொன்னார் `பிரம்மரே நீர் ஒரு வாரம் பூலோகம் சென்று அதிலும் குறிப்பாக தமிழ்நாடு என்ற தேசம் சென்று வாரும்...அப்புறமாய் உம் கேள்விக்கு விடை சொல்கிறேன்.' பிரம்மனும் உடனடியாக பூலோகம் சென்று ஒரு வாரம் தங்கிவிட்டு சிவனிடம் வந்து சேர்ந்தார் ..`பிரபு என்னை மன்னிக்க வேண்டும் ....நம்மிலும் பெரியவர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் ...அவங்க ஒன்றுமே இல்லாததையும் ஊதிப் பெருசாக்கி குளிர்காய்கிறார்கள் .நம்முடைய செப்படி வித்தையெல்லாம் தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய இந்த அரசியல்வாதிகளிடம் செல்லாது பிரபு''.....இதழோரம் வந்த சிரிப்போடு மீண்டும் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்தார் சிவன்..

சுசீந்திரன்.

நாள் : 8-Aug-15, 8:59 pm

மேலே