எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வளர்ந்து வரும் காமெடி நடிகர் யோகி பாபு. சின்ன...

வளர்ந்து வரும் காமெடி நடிகர் யோகி பாபு. சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தவர் தற்போது சோலோ காமெடியனாகவும் வளர்ந்து வருகிறார். அவர் தற்போது நடித்து வரும் படமான ''கா கா கா'' என்ற திகில் பேய் படத்தில் ராகவா லாரன்சை இமிடேட் செய்து நடித்து வருகிறார்.


ஒரு பங்களாவில் இருக்கும் குழந்தை பேயை ஓட்ட வரும் யோகி பாபு "நான்தான் காஞ்சனா" என்று கூறி காஞ்சனா 2 படத்தில் ராகவா லாரன்ஸ் ஒரு சிறுமியின் வடிவில் பேயாக வருவார் அல்லவா அதே மாதிரியான பேய் தோற்றத்தில் வந்து பேயை விரட்ட முயற்சிக்கிறார். இந்தப் படத்தில் அசோக், கரன், மேகாஸ்ரீ, சங்கீதா பட், நாசர், ஜெயசுதா, பேபி யுவினா. உள்பட பலர் நடிக்கிறர்கள். சரவண நடராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். மனோன் இயக்குகிறார். கிரன்பதி கொண்டா தயாரிக்கிறார்.

நாள் : 13-Aug-15, 9:37 am

மேலே