குறிப்பு:அன்பு நண்பர்கள் சமூத்திற்கு வணக்கம்.இத்தளத்தில் தொடர் நாவலாக “கரிசல்மண்ணில்ஒருகாவியம்”...
குறிப்பு:அன்பு நண்பர்கள் சமூத்திற்கு வணக்கம்.இத்தளத்தில் தொடர் நாவலாக
“கரிசல்மண்ணில்ஒருகாவியம்”
தொடர்ந்துவெளியாகிவருகிறது.இப்போது
பதினோராவதுவதுஅத்தியாயம்(178863)வெளியாகியுள்ளது
என்பதைமகிழ்ச்சியுடன்தெரிவித்துக்
கொள்கிறேன்.கதை என்பது வெறும் கற்பனை மட்டும் அல்ல.அது நிசம் கலந்த ஏதாவது ஒரு வரலாற்றின் சுவடு அல்லது நிகழ்வின் நிழலும் கற்பனை வளமும் கலந்த ஒரு வண்ணக் கலவை. அதனால்தான் கவிதை படைப்பதை விட கதை புனைவது என்பது கடினம் என்பதையும்புரிந்துகொள்ளும்அனுபவம்அறிந்துகொண்டேன்.ஏனெனில்
ஒரு கதையைக் கூறும் போது அதற்காக எடுத்துக்கொண்ட களத்தைப் பற்றித்
தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் கட்டாயமாகிறது.எந்த வட்டாரத்தை களமாக வைத்துக்கொண்டு கதையைச் சொல்கிறோமோ அந்த வட்டாரத்தின் வழக்கு மொழி பண்பாடு கலாச்சாரம் சமூக அமைப்பு பூகோள இயல்பு போன்ற அத்தனை அறிவையும் திரட்ட வேண்டியுள்ளது.எனவேதான் குறைந்த இடைவெளியில் கதையைக் கொடுப்பதும் கடினமாகிறது.எனவே என்னால் இயன்றவரை வாரம் இரண்டு தொடர்களை கொடுக்க முயற்சிக்கிறேன்.தொடர்ந்து கதையை வாசித்து மேற்கொண்டு வளம் கூட்ட உதவுங்கள்.எழுத்துத் தளம் என்பது இயற்றிப் பழக உதவும் ஒரு பலகைதான்.அதனால்தான் இங்கே திருத்தவும் நீக்கவும் அனுமதிக்கப் படுகிறது.நம்மை நாமே திருத்தியும் திருந்தியும் நம்மை நாமே வளர்த்துக்கொள்ள இத்தளம் நமக்கு அருளப்பட்ட ஒரு வரப்பிரசாதம்.நாமே நமக்குள் ஆசிரியனாகவும் மாணவனாகவும் இருந்து ஒருவரை ஒருவர் வளர்த்தும் வளர்ந்தும் கூடி மகிழ்வோமாக! நன்றி!
கொ.பெ.பி.அய்யா.