எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோழருக்கு விருதளிப்பும் தோழர்களின் நூல்கள் வெளியிடும் ஈரோடு தமிழன்பன்...

தோழருக்கு விருதளிப்பும் தோழர்களின் நூல்கள் வெளியிடும்
ஈரோடு தமிழன்பன் விருது-80 பெறும் தோழமைகளுக்கு வாழ்த்துகள்

தோழமை நெஞ்சங்களே...

வணக்கம்...

பாரதியார்....பாரதிதாசன்....என்பவர்க்குப் பின் தமிழின் ஆகச்சிறந்த மகா கவி நிலையடைந்த ஒருவர் தான் ஈரோடு தமிழன்பன்...முதுபெரும் தமிழ்த் திறனாய்வாளர் கா.சிவத்தம்பி இதனை பதிவு செய்துள்ளார்..இப்படி..."சமநிலைக் கவிஞர்களுள் முதல்நிலைக் கவி(ஈரோடு தமிழன்பன் தேசியக் கருத்தரங்க நிறைவு விழாச் சிறப்புரையில் ) " .....

ச.செந்தில்நாதன் ,கா.நா.சு படைத்த 'திறனாய்வு நோக்கில் ஈரோடு தமிழன்பன் கவிதைகள் 'நூல் மதிப்புரையில் இப்படி குறிப்பிட்டுள்ளார்--
" மகாகவி என இன்று கருதத்தக்கவர் ஈரோடு தமிழன்பன் "...

'தமிழன்பன் படைப்பும் பார்வையும் 'எனும் நூலில் கோவை ஞானி இப்படி எழுதியுள்ளார்--
"ஈரோடு தமிழன்பன் மாகா கவி நிலையை நெருங்கிவிட்டார் "

" ஈரோடு தமிழன்பன் படைத்த 'வணக்கம் வள்ளுவ 'எனும் (சாகித்திய அகதெமி விருது வென்ற நூல் )நூலிலே வள்ளுவ யாப்பாம் குறள் வெண்பா குறித்து அவர் எழுதிய எழுத்துகள் ,சிந்தித்த கருத்துகள் இதுவரை தமிழ் வரலாற்றில் எவரும் சிந்திக்காதவை ...." -என முனைவர் யா. மணிக்கண்டன் தமிழன்பனின் அண்மை வெளியிடான' மழை மொக்குகள் 'எனும் நூலில் தனது ஆய்வுரையில் எழுதியுள்ளார்.....


80-ல் 70-ஐ தொடுபவர் தமிழன்பன்....!!!!

ஆம் ,80 அகவையில் 70 நூல்களுக்கு சொந்தக்காரர் இவர்...!!!

அதுவும் பல புதிய வகைகளை நமக்கு அளிப்பவர்...மரபுக்கவிதை , ,புதுக்கவிதை ,வசன கவிதை ,கவியரங்கக்கவிதை ,ஐக்கூ ,சென்ட்ரியு ,லிமரைக்கூ,கஜல்,,நாடகம்,திரைப்படப் பாடல்கள் ,ஆராய்ச்சி கட்டுரைகள்,புனைகதை ,சிறுவர் பாடல்கள்...என பன்முக படைப்புகளை இன்றும் தொடர்ந்து அளித்து வருபவர்..

இத்தகு தகைசால் தமிழ் படைப்பாளியின் பல படைப்புகள் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன...

இவரின் 80ஆவது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியென இவரின் பெயரால் ஊக்குவிப்பு விருதளிக்க திட்டம் இயற்றியுள்ளோம்....தமிழக அளவிலும் உலகளாவிய அளவிலும் 80 படைப்பாளிகள் தமிழன்பன் 80 எனும் விருது பெற உள்ளனர்.....

இவ்வகையில் தளத்தின் படைப்பாளிகள் ,நமது தோழர்கள் இவர்கள்...விருது பெறுகின்றனர் என அறிக...

வாழ்த்துவோம் வாருங்கள்...

தோழர்கள்...
1.ராஜேஷ் குமார் (இணையதள தமிழ்ச் சேவைக்காக )
2.பொள்ளாச்சி அபி
3.காளியப்பன் எசக்கியேல்
4.கிரிகாசன்
5.கொ.பெ.பி.அய்யா.
6.ஜோசப் ஜூலியஸ்
7.ரமெஷாலாம்
8.பிரேமா பிரபா
9.கலை ஞானகுமார்
10.ரொஷான் எ ஜிப்ரி
11.கவிஜி
12.சரவணா
13.அகமது அலி
14.நிலா சூரியன்
15.சிந்தா மத்தார்
16.ஹூஜ்ஜா
17.வினோத் கண்ணன்
18.புலமி அம்பிகா
19.வா. நேரு
20.தமிழ்தாசன்
21.தேவா
22.ஹரி ஹர நாராயணன்..(10000 படைப்புகள் அளித்தவர் )

விழா நாள் :08.03.2014 இடம் : புதுச்சேரி
காலம் மற்றும் விழா அரங்க பெயர் பின்னர் அறிவிக்கப்படும்...

விழாவில் நூல்கள் வெளியிடப்பட உள்ளன :

1.தொட்டில் சூரியன்

(தமிழ் இலக்கியத்தின் மூன்றாவது பேரத் தமிழ் கவிதைகள் –ஆங்கில மொழிபெயர்ப்புடன் )

2. அலகுகளால் செதுக்கிய கூடு
(தலைப்பு : ரோஷான் எ. ஜிப்பிரியின் கவிதை )

(தேவா சுப்பையா, ரோஷான் ஏ.ஜிப்ரி ,பிரேம பிரபா ,ரமேஷாலம் ,கவிஜி ,சரவணா ,கே.எச்.கலை ,,நிலா சூரியன் ,அகமது அலி ,சிந்தா மத்தார் ,வினோத்கண்ணன் ,சுசிந்திரன் ,தமிழ்தாசன் –ஆகியோரின் தொகுப்பு)

3. எனக்கென்று ஒரு முகம் இல்லை
(தலைப்பு: திலகவதியின் கவிதை )

(சாந்தி ,உமா பாரதி ,நாஞ்சில் திலகா சிவம் ,சுதா யுவராஜ் ,நாகினி கருப்பசாமி ,ஹுஜ்ஜா ,புலமி அம்பிகா ,புனிதா வேளாங்கண்ணி ,கே.பிரியா ,யாத்விகா கோமு ,சரண்யா(கவியாழினி –ஆகியோரின் தொகுப்பு))

4. செங்காத்து வீசும் காடு
(தலைப்பு: தேவா சுப்பையாவின் சிறுகதை )

(தேவா சுப்பையா ,பொள்ளாச்சி அபி ,கவிஜி ,வா.நேரு ,குமரிப்பையன் ,சந்தோஷ் குமார்,பெ.அய்யா, –ஆகியோரின் தொகுப்பு)

5.இந்தப் பிரியங்களை என்ன செய்ய ?(அச்சில் )

6. க. கன்னியப்பன் கவிதைகள்(அச்சில்)

7. வா.நேருவின் கவிதைகள்(அச்சில்)

8.தேன் தெரிவுகள்..
(தமிழன்பனின் சிறந்த கவிதைகளின் தெரிவுகள் )(அச்சில்)

அனைவரும் வருக என் அன்போடு அழைத்து மகிழ்க்கிறோம்...

முக்கிய குறிப்பு:

விருது மேடையில் மட்டுமே அளிக்கப்படும் . எனவே அனைவரும் வருதல் நலம் பயக்கும். வெளி நாட்டில் உள்ளவர்கள் இங்கு உள்ள உறவு அல்லது மிக உற்ற நட்பின் மூலம் பெறலாம். ஆனால் அப்படிபட்டவர்களின் பெயரை உடனே எனக்கு தனி விடுகையில் பதிவு செய்வது அவசியம் என் அன்போடு அறிக.

படைப்பாளிகளுக்கு அவரவர் நூல்கள் மேடையில் வெளியிடப்படும் பொழுது வழங்கப்படும். கூட்டுறவு முறையில் படிகளும் அன்றே அளிக்கப்பட்டு விடும் என அறிக. (திருவாளர்கள் .க.கன்னியப்பன் கவிதைகள்,.வா.நேருவின் கவிதைகள் நீங்கலாக )

விழாவிற்கு வருவோர் உடன் தங்கள் பயணதிட்டத்தை எனக்கு தெரிவிக்கவும்.

அன்புடனும் ஆக்க விழைவுகளோடும்...

அகன்

கூட்டுறவு

பதிவு : agan
நாள் : 15-Feb-14, 8:57 pm

மேலே