எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சேயோன் என்பவன் குறிஞ்சிக்கு கடவுள் முருகன் ஆவான் சேயோன்...

சேயோன் என்பவன் குறிஞ்சிக்கு கடவுள் முருகன் ஆவான்

சேயோன் என்பவன் தமிழர் வகுத்த ஐந்திணைகளில் குறிஞ்சிக்கு கடவுள் ஆவான். சேயோன் என்ற பெயர் சிவந்தவன் என்ற பொருளை தரும் என்பதால் சிவன், முருகன் இரண்டு பேருமே சேயோன் என்று கூறப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்,
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் - தொல்காப்பியம் அகத்திணையியல்

சேயோன் குன்றகத் திருப்பெறு கூடல்: கொடுஞ்சுடர் கிளைத்த நெடுஞ்சடைப் புயங்கண் - கல்லாடம்:97

மறியப் புதைத்த மறம்கெழு பெருமான் நீர்மாக் கொன்ற சேயோன் குன்றமும் கல்வியும் - கல்லாடம்:85

பிறப்பு அறுக்கும் பிஞ்ஞகன் தன் பெய் கழல்கள் வெல்க! புறத்தார்க்குச் சேயோன் தன் பூம் கழல்கள் வெல்க! - திருவாசகம்

தொல்காப்பியம் முருகன் எனும் கடவுளின் வரலாற்றைப் பற்றி அதிகம் உரைக்கவில்லை எனினும் முருகனைச் சேயோன் (சேய் = மகன்) என மட்டுமே அழைப்பதில் இருந்து அவன் மிக வலிமையான ஒரு தெய்வத்தின் மகனாகக் கருதப்பட்டு இருக்கவேண்டும் என்பது புலனாகிறது.

பதிவு : கீத்ஸ்
நாள் : 31-Aug-15, 3:42 pm

மேலே