பல சமயம் குதிரையை நினைத்து யானையை வரைந்த கதையாகவே...
பல சமயம்
குதிரையை நினைத்து
யானையை வரைந்த கதையாகவே
முடிந்துவிடுகிறது
எனது படைப்பாக்கம்..
மெதுவாய்
மிக மிக பொறுமையாய்
சிந்தனை மென்உளியால்
தொட்டுத்தடவி.. தழுவித்தொட்டு
நுரைமேகத்தில்
துளையிட்டு... மந்திர
கவிமழைத்துளிகளை சிந்திடவைக்கும்
அற்புத தந்திரசூத்திரத்தை
நான் இன்னும் கற்கவில்லை.
கற்றுவிட்டால்.........
நானே.....
நானே....
இவ்வுலகின் ஆகச்சிறந்த படைப்பாளி...!
***
இரா.சந்தோஷ் குமார்.