எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோஷமாக மாறும் சில தவறுகள் ...... நமது சோதிடம்...

தோஷமாக மாறும் சில தவறுகள் ......
நமது சோதிடம் மற்றும் சமயத்தில் உள்ள சில தகவல்கள் ..

1.குளிக்காமலே காலை சாப்பிடுவது.
2.நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பது .
3.சாமிக்கு தினமும் நமஸ்காரம் செய்யாமல் வீட்டை விட்டு வெளியில் கிளம்புவது.
4.காலைவேளையிலே சாப்பிடாமலே செல்வது.
5.தினமும் நகத்தை கடிப்பது.
6.இரு கைகளாலும் தலையை எப்போது பாத்தாலும் சொரிக்கு ஹிதமாக சொரிந்துகொள்வது .
7.அம்மா அப்பாவிற்கு தினமும் நமஸ்காரம் செய்யாமல் இருப்பது .
8.பள்ளி ஆசிரியர்களை கேலி செய்வது .
9.அனைவரையும் மரியாதை இல்லாமல் அழைப்பது .
10.வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரியை, குழந்தைகள், வாடி போடி என்று கூப்பிடுவது .இதை பார்த்துக்கொண்டு பெற்றோர்கள், அந்த குழந்தை பேசுவதை ரசிப்பது .
11.வெளியில் இருந்து வீட்டுக்கு எத்தனை தடவை வந்தாலும் காலை அலம்பாமல் அப்படியே இருப்பது.
12.மாதவிடாய் காலத்தில் அந்த சட்டத்தை மதிக்காமல் தன் இஷ்டத்துக்கு இருப்பது.
13.வெறும் தரையில் படுத்து தூங்குவது. மதியம் தூங்குவது .
14.மாலை நேரத்தில் வீட்டில் விளக்கு ஏத்தாமல் இருப்பது
15.மாலை விளக்கு வைத்தவுடன்., தலை வாருவது.
16.இரவு அதிக நேரம் கண் விழித்துக்கொண்டு இருப்பது. அதிகாலை தூங்கிக்கொண்டு இருப்பது.
17.யாரையும் தூக்கி எரிந்து பேசுவது .
18.எப்போது பாத்தாலும் வீட்டு வாசலை மூடியே வைப்பது.
19.பசு மாடு, காளை மாடு இவைகளை அது சும்மா இருக்கும்போது, நாம் அதை அடிப்பது .வேடிக்கை பார்ப்பது .
20.காக்கைக்கு சாதம் வைக்காமல் இருப்பது.
21. நாய்க்கு சாதம் போட்டு, அது சாப்பிடுவதை பார்ப்பது.
22.வருடா வருடம், முன்னோர்களின் திதியை நமது வீட்டில் செய்யாமல் இருப்பது .
23.கணவனை எதுத்துப்பேசுவது. மனைவியை அடிப்பது. .குழந்தைகளை சரியாக வளர்க்காமல் இருப்பது.
24.சிறு வயதிலேயே பக்தியை சொல்லிக்கொடுக்காமல் இருப்பது.
25.புண்ணிய நதிகளில் குளிக்காமல் இருப்பது.
26.கோயிலுக்கு போகாமலேயே இருப்பது.
போனாலும், பேசிக்கொண்டே, செல்வது.
27.வீட்டு வாசல்படியிலேயே அமர்வது.
28.வீட்டில் துணிகளை அன்றாடம் துவைக்காமல், அப்படியே ஒரு மூலையில் போட்டு வைப்பது .
29.வருடத்துக்கு ஒரு தடவையாவது குலதெய்வம் கோயில் போகாமல் இருப்பது.
30.வீட்டில் பூஜைகள் செய்யாமல் இருப்பது.
31.வளரும் மரத்தை அனாவசியமாக வெட்டுவது ,கொத்துவது பழுது படுத்துவது .
இப்படி நிறைய தகவல் சோதிடத்தில் உள்ளது .
வளரும் தலைமுறைக்குகாக சில தகவல் மட்டும் பதிந்து உள்ளேன் .
இவைகளை பின்பற்றுவது அவரவர் விருப்பம் .
சில தோசம்கள் கடுமையாக வேலை செய்யும் பொழுது ஆராய்ந்தால்
சில தவறுகள் புரியும் .
இப்படி புரியப்பட்டது வகுக்கபட்டது பிறருக்கு சொல்லப்பட்டது .....
நன்றி .....

நாள் : 24-Sep-15, 6:26 pm

மேலே