ஆதார் அட்டையைப் பற்றி படித்து இரசித்தவை...!! ஆதார் அடையாள...
ஆதார் அட்டையைப் பற்றி படித்து இரசித்தவை...!!
ஆதார் அடையாள அட்டை திட்டம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, சர்ச்சை ரவுண்டு கட்டி அடிக்கிறது. இந்நிலையில், 'பொது வினியோகத் திட்டத்துக்கு மட்டுமே, ஆதார் அட்டை அவசியம்; அரசின் பிற நலத் திட்ட உதவிகளைப் பெற ஆதார் அவசியம் இல்லை' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து, 'டுவிட்டரில்' பதிவான கருத்துகள்.
மண்ணெண்ணெய், சமையல் பொருட்கள் வாங்க மட்டுமே ஆதார் அட்டை -- உச்ச நீதிமன்றம்ஜட்ஜ் அய்யா... ரேஷன் கார்டுன்னு ஒண்ணு இருக்கே; அதை என்ன பண்றது?
எந்தப் பெண்ணாவது ஆதார் கார்டில் அழகாய் தெரிந்தால், தயங்காமல் கொடுக்கலாம், இந்திய அழகி பட்டம்!நம் புகைப்படத்தை பார்த்து,'ஆ... இது யாரு!' என திகைப்பதின் சுருக்கமே ஆதார்.ஆதார் அட்டைன்னு சொல்றத விட, அவதார் அட்டைன்னு தான்சொல்லணும் போல; நம்ம மூஞ்சு அதுல அப்படி தான் இருக்கு!ஆனானப்பட்ட ஐஸ்வர்யா ராயையே, அழுக்கு மூஞ்சியா காமிக்கும் ஆதார் அட்டை கட்டாயமில்லன்னு வயித்துல பால வார்த்திருக்கு உச்ச நீதிமன்றம்..!!ஆதார் கட்டாயமில்லன்னு கோர்ட் சொல்லிருச்சாமே...!அப்பவே தெரியும்; அதுல இருக்குறது ஒரு மூஞ்சி கூட நம்ம சாதிசனத்துது இல்ல...பூரா ஏலியன்ஸ் தான்!1) ஆதார் அட்டை எடு2) உன் போட்டோவை பார்3) ஆக்சிடென்டானால் உன் மூஞ்சி அப்படித்தான் இருக்கும்4) இப்ப ஹெல்மெட் அணிவதை பற்றி யோசிஆதார் கார்டுல இருக்கிறது நான் தான்னு, 'புரூவ்' பண்ண, இன்னொரு, 'ஐ.டி., புரூப்' குடுக்கணும்போல; எனக்கே என்னை அடையாளம் தெரியாத மாதிரி போட்டோ எடுத்துருக்கான்.