எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இவர் விரல்களில் சிறைப்பட்ட பென்சில்கள் விடுதலையினை கோருவதில்லையாம்.. இவர்...

இவர் விரல்களில்

சிறைப்பட்ட பென்சில்கள்
விடுதலையினை கோருவதில்லையாம்..

இவர் விரல்களுக்குள்
அடைப்பட்ட எழுதுகோல்
மீண்டும் வெளிப்பட விரும்பவில்லையாம்..

இவர் விரல்களால்
பென்சில்கள்
அழகான ஒவியங்களை
தீட்டிவிடுகிறது

இவர் விரல்களால்
எழுதுகோல்
கருத்தான கவிதையினை
எழுதிவிடுகிறது. 

கலைப்படைப்பின்
அனைத்து நுணக்கமும்
அறிந்த திறமையாளர் என்றாலும்
அன்பாலும் நட்பாலும்
அனைவரையும் அரவணைத்திடும்
அன்பான தாய்மையானவர்..

அம்மா.. திருமதி.கிருபா கணேஷ்
அவர்களுக்கு
இன்று பிறந்தநாள்...


தளத்தில் இளையவர்கள்
அனைவரையும்
தன் செல்லப்பிள்ளையாக வாழ்த்தும்
அம்மாவிற்கு 
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

எல்லா வளமும் பெற்று
நிம்மதி செல்வம் நிறைந்து
நீண்ட ஆயுளுடனும்
நீடித்த புகழுடனும்
வாழ வாழ்த்தும்

-அன்பன்
இரா.சந்தோஷ் குமார். 

நாள் : 30-Sep-15, 1:54 pm

மேலே