சந்திர சேகரர் என்ற பெயர் கொண்டிருந்த தெய்வம் எந்நாளும்...
சந்திர சேகரர் என்ற பெயர் கொண்டிருந்த தெய்வம்
எந்நாளும் பக்தர்களின் சொந்தமான தெய்வம்
அன்புடனே மனதில் வைத்து வணங்கி வந்தாலே
அன்னையாக அடுத்து நின்று அருளிடும் தெய்வம்
சக்தியுள்ள அதிஷ்டானம் அமர்ந்திருக்கும் தெய்வம்
சங்கடங்கள் நீக்கிடவே துணை நிற்கும் தெய்வம்
சந்திர சேகரனே ஓரிக்கையில் ஆட்சி செய்யும் தெய்வம்
சட்டெனவே ஓடி வந்து காத்து நிற்கும் தெய்வம்
தபோவனத்தில் சித்தர்களுடன் அமர்ந்திருக்கும் தெய்வம்
தாங்கி நின்று, நம்மையே, தாங்கி நின்று வழி நடத்தும் அன்பான தெய்வம்
குருவுருவே காஞ்சிமா முனிவர் சந்திர சேகரர்
குருபிரம்மா குருவிஷ்ணு குருதேவ மஹேஸ்வரராம்
குருமூலம் பரப்பிரம்ம உருவற்ற பரவொளியாம்
குருவுருவே சகுணகுணத் திருவுருவம் தனைத்தாங்கி
அருமருந்தாய்த் தரிசனம்தரும் அனுபூத அடியார்க்கே
எமக்கு எப்போதும் விருந்து கண் கண்ட கலியுக ஜகத்குரு உந்தன் தரிசனம்
எமக்கு ஒவ்வொரு நொடியும் விருந்து கண் கண்ட கலியுக ஜகத்குரு உந்தன் ஆசிகளே!
ஜெகம் போற்றும் ஜகத்குரு ஜெய ஜெய குரு சங்கரா
ஜெய ஜெய குரு சங்கரா ஜெய ஜெய குரு மா தவா
ஹரி நாராயண துரித நிவாரண பரமானந்தா சதா சிவ சங்கரா சரணம்!
Courtesy: ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹா பெரியவா தாசன்
டாக்டர். கி.பாலசுப்ரமணியன்