எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆச்சி மனோரமா மரணம். நடிகை . மனோரமாவை ”ஆச்சி...

ஆச்சி மனோரமா மரணம்.


நடிகை . மனோரமாவை ”ஆச்சி “ என  அழைக்கப்பட காரணம்.  சிறுவயதில் காரைக்குடியில்  வாழ்ந்தவர் என்பதால்  அவ்வாறு அழைக்கப்பட்டார். 


பூர்வீகம் தஞ்சாவூர் . இரண்டாவது   திருமணம் செய்துக்கொண்ட  தன் தந்தையின் சித்ரவதையும் சித்தியின் கொடுமையும் தாளாது ..சில சூழ்ச்சிகளால் .. மனோரமாவின் தாயாரை  தஞ்சாவூர் மாவட்டத்தை விட்டே வெளியேற்றப்பட்ட   போது  மனோரமாவிற்கு வயது ஒன்று. 


வறுமையின் காரணமாக சிறுவயதிலயே  நன்றாக படித்த கல்விப்  படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தான் வாழ்ந்த இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள  பள்ளத்தூரில்  சினிமா டெண்ட் கொட்டகையில் பலகாரம் விற்ற ’கோபி சாந்தா ’ என்ற சிறுமி தான் பின்னாளில்  திரையுலகில் மாபெரும் சாதனைச் செய்த மனோரமா. 


சின்னக் குழந்தையாக இருந்தப்போதே நன்றாக பாடும் திறமைக்கொண்ட கோபி சாந்தா எனும் சிறுமி   ஒருநாள் ...  எதிர்பாராத விதமாக “ அந்தமான் காதலி “ எனும் நாடகத்தில் பாட்டு பாடி நடித்தார். அந்த நாடகத்திலிருந்துதான்....  ‘ மனோரமா ‘ எனும் பெயர்  அவருக்கு சூட்டப்பட்டது. 


ஆச்சியின் மிகச்சிறந்த நாடக நடிப்பை பார்த்த  எம். ஆர். ராதா அவர்களால்.. முதன் முறையாக ’ இன்ப வாழ்வு ‘  எனும் திரைப்படத்தில்  நடிக்க பரிந்துரைக்கப்பட்டார். ஆனால் அப்படம் பாதி எடுக்கப்பட்டு பின்பு கைவிடப்பட்டது.  கவிஞர் கண்ணதாசனின்  அடுத்த பட வாய்ப்பும் இவ்வாறே கைவிடப்பட.....   கதாநாயகி கனவிலிருந்த மனோரமா அவர்கள்.... சொந்த ஊர் செல்ல முடிவெடுத்தப்போதுதான்... 

மாலையிட்ட மங்கை எனும் படத்திற்காக  கவிஞர் கண்ணதாசன்...   நகைச்சுவை நடிகையாக  மனோரமா வை ஒப்பந்தம் செய்தார். தனக்கு நகைச்சுவை வராது என்று சொல்லியும்.. கவிஞர் அவர்கள் ஊக்கம் கொடுத்து..... நடிக்க வைத்தாராம்.   


“ நான் கதாநாயகியாக இருந்திருந்தால் ... சினிமாவிலிருந்து பாதியிலே சென்றிருப்பேன். நகைச்சுவை நடிகை என்பதால் தான் .. இந்த அளவு. இந்நாள் வரை நீடிக்கிறேன் “ என ஒரு முறை குங்குமம் இதழுக்கு அளித்தப்பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் ஆச்சி மனோரமா. 


 காதலித்து  தனது தாயாரை எதிர்த்து திருமணம் செய்துக்கொண்ட மனோரமாவை...  கர்ப்பணியாக்கி  விட்டுச்சென்றது ஒரு நாடக நடிகர். ( பெயர் அறியமுடியவில்லை ) அதன் பிறகு மகன் பூபதிக்காக  மீண்டும் நாடகங்களில் நடிக்கத்தொடங்கி .. சினிமாவிலும் நடிக்க தொடங்கினார். 


பேரறிஞர் அண்ணா அவர்கள் எழுதிய 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் படத்தில் அறிஞர் அண்ணா காசுப்பட்டராக நடிப்பார். சிதம்பரத்தில் நடந்த இந்த நாடகத்தில்  கதாநாயகி இந்துமதியாக  மனோரமா அவர்கள் நடித்தார். இதே நாடகத்தில் ஈ.வெ.கி. சம்பத் சிவாஜியாகவும், கே.ஆர்.ராமசாமி சந்திரமோகனாகவும் நடித்திருந்தார்கள். 


தி.மு. கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் எழுதிய 'உதயசூரியன்' நாடகத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட தடவை நடித்திருக்கிறார் ஆச்சி மனோரமா.  உதயசூரியன் நாடகத்தில்  கலைஞர் கதாநாயகன். மனோரமா  கதாநாயகி.  அரங்கேற்றம் தேவகோட்டை தி.மு. கழக மாநாட்டில் நடந்தது. 


பின்னொரு நாளில்..இதுகுறித்து மனோரமா சொன்னது “ இரண்டு முக்கிய பெரும்தலைவர்களோடு நடித்த பெருமை எனக்குண்டு. என் வாழ்நாளில் என்றும் மறக்க முடியாதவை அவை.”. 

 தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்று காவியமாக எடுக்கப்பட்ட ‘ பெரியார்’  திரைப்படத்தில்... பெரியாரின் தாயாராக நடித்து பெருமை பெற்றுக்கொண்டார் மனோரமா.!

கலைஞர் கருணாநிதி அவர்களின் தாயார்.. சகோதரிகளோடு..... நல்ல நட்பும்.. கலைஞரின் குடும்ப உறுப்பினரில் ஒருவராகவும் இருந்தார்  ஆச்சி மனோரமா. 

அதே போல செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள்  முதலமைச்சர் என்ற நிலைக்கு உயர்ந்த போதிலும்  “ அம்மு “ என்று  உரிமையோடு  அழைக்கும் அளவிற்கு நெருங்கிய நட்பு கொண்டிருந்தார்.


வாழ்க்கையில்.. விடாமுயற்சியோடு.. வறுமைகளையும் கொடுமைகளையும் வென்று.. தன்னம்பிக்கையோடு திறமையை வளர்த்துக்கொண்டு.....  கின்னஸ் சாதனை , தேசிய விருது.. உட்பட பல  பெருமைகளை சேர்த்து..  திரையுலகின் இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாகவும்... திரையுலக வரலாற்று  பெருமைமிகு சின்னமாக வாழ்ந்த கலையுலகில் அன்போடு ” ஆச்சி” என அழைக்கப்படும்  திருமதி. மனோரமா நேற்றிரவு 11 மணியளவில் காலமானார்.. 



தகவல் தொகுப்பு : 

இரா.சந்தோஷ் குமார். 


நாள் : 11-Oct-15, 4:50 am

மேலே