எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

டாஸ்மாக் கடைக்கு ஒரு மாற்று ஒரு வருடத்துக்கு இரண்டு...

                                                                                         டாஸ்மாக் கடைக்கு ஒரு மாற்று 

ஒரு வருடத்துக்கு இரண்டு லட்சம் உயிர்களை  காவு வாங்கும் TASMAC என்ற சாராயக்கடையை, 
                                                                      TASMAC  அதாவது (TAmilnadu Special Medical Aid Center)  என்று  அனைத்து சாரயக்கடைகளையும் மாற்றி ஒரு டாக்டரை பணி அமர்த்த முடியாவிட்டாலும் ஒரு செவிலியையும், ஒரு ஆயாவையும் போட்டு திடீர் என வரும் தலைவலி, ஜுரம், பக்கவாதம், விபத்து, மாரடைப்பு போன்றவற்றுக்கு முதலுதவி கொடுத்தால், தினமும் நூற்றுக்கணக்கான உயிர்களை காப்பாற்றலாம். 

இது மாதிரியான TASMAC (TAmilnadu Special Medical Aid Center), மக்கள் தினம், தினம் மருத்துவம் தெரியாத மருத்துவர்களிடம் மருத்துவம் பார்ப்பதையும், மருந்து கடைகளில் மருத்துவம் பார்ப்பதையும் , குடித்துவிட்டு வாகனம்  ஓட்டுவதால் வரும் விபத்தையும் தடுக்குமே..! 

இந்த மாற்றம், கிராமத்து மக்கள் மட்டுமன்றி நகரத்து மக்களுக்கும்  பெரும் பயனாக இருக்கும். அது மட்டுமன்றி வீட்டுக்கு ஒருவர் டாஸ்மாக் சரக்குக்கு பலியாவதையும் அதனால் அந்த குடும்பம் நடுத்தெருவில் நிற்பதையும், வேறு வழியின்றி பெரும் பெண்கள் சூழ்நிலைகைதியாய், பாலியல் தொழில்களுக்கும், கொத்தடிமைகளாகவும் பணிபுரிவதையும், ஆதரவற்ற குழந்தைகள் படிப்பை கைவிட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதையும், சமூகம் இதுமாதிரியான காரணிகளால் புரையோடுவதையும் தடுக்கலாமே!!

இப்படியே போனால்.... பாதுகாப்பு அரணுக்குள்  பலியானது போல், தமிழ் இனமே அழிந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.....!!!



பதிவு : ஆ க முருகன்
நாள் : 13-Oct-15, 8:42 pm

மேலே