எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

17 10 2015 இனிய பிறந்ததின வாழ்த்துகள் மலரும்...

17 10 2015

இனிய பிறந்ததின வாழ்த்துகள் 

மலரும் நினைவுகள். படித்தது 
17.10.2011
அகவை அறுபத்து ஏழு 
பிறந்த நாள் இன்று, 
எழுத்து தளத்தில் எழுதுகிறேன் 
நான்கு மாதங்களாய் கவிதை; 

பிறந்த நாள் பகுதியில் 
தினந்தோறும் வரும் 
ஓர் கவிஞரின் பெயர், 
பார்த்துவிட்டு தாண்டிச் 
சென்று விடுவேன் 
ஒவ்வொரு நாளும்; 

இன்று என் பிறந்த நாள் 
அப்படியொன்றும் விட்டுவிடவில்லை 
யாவரும்; 

வாழ்த்துக்கள் குவிந்தன ஏராளம், 
கவிதையில் வாழ்த்தினர் ஒரு சிலர்; 

அன்பு நெஞ்சம் கொண்ட 
ஈஸ்வர், கவிதாயினி, 
வென்றான், எழுமலை முதலாய் 
கவின் சாரலன், ம.ரமேஷ், 
வளர்மதி, பிரிந்தா வரை 
மனதார என்னை வாழ்த்தினர், 
அவர்தம் அன்பினைக் கண்டு 
பிரமித்தேன். 

அவர்களும் மற்றும் அனைவரும் 
வாழ்க வளமுடன்.

நாள் : 17-Oct-15, 10:49 am

மேலே