எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வித்தக கவி விவேக் பாரதிக்கு பிறந்தநாள் வாழ்த்து. இலக்கியம்...

வித்தக கவி விவேக் பாரதிக்கு பிறந்தநாள் வாழ்த்து. 


இலக்கியம் ஒரு தேசமென்றால்
அதில் இந்த இளையவன்
பட்டத்து இளவரசன். 

மொழி ஒரு நந்தவனமென்றால்
அதில் இந்த கவிஞன்
கவிமண நாயகன். 

வித்தக கவி இவனை
எழுத்துலகம் எனக்களித்த
தங்கத் தம்பி.

மரபுகவி இவனெழுத்தில்
ஒரு புது கருவி.

மகாகவி தமிழன்பனிடம்
இளைய கம்பன் இவன்
விருது பெற்றப்போது
கவிக்கோ மன்றம்
கொஞ்சம் அதிர்ந்தது
கை தட்டலில்..!

யாரேனும் கவனித்தீர்களா....?

வேறு யாருமில்லை
சுவற்றில் ஒவியமாகியிருந்த
கவிதை பெருந்தகைகளோடு
அந்த பாரதி
என் தம்பி
விவேக் பாரதிக்கு
என்னோடு சேர்ந்து
கைத்தட்டினால்
அரங்கம் அதிராமலிருக்குமா....?


வித்தகனே....! கவிஞனே...!
இந்த வயதில் உனக்கிந்த
திறனென்றால்
எந்தன் வயதில் தமிழுலகம்
உந்தன் வசமடா...!


நீ உண்ணும் உணவில்
என்ன சக்தியிருக்கும்..?
வெண்பாவா
ஆசிரியப்பாவா
கலிவிருத்தமா.. 
இல்லை இலக்கியம்
மொத்தமுமா....? 

திருச்சி மாநகர் காற்று
சுவாசிக்கவும் வாசிக்கவும்
எங்கிருந்து எடுத்து உனக்கு
தமிழிலக்கணம் நுழைக்கிறது.? 

உந்தன் கவிதைகளை 
படித்திடும் போதெல்லாம்
பண்ணிரெண்டாம் வகுப்பிலிருக்கும்
பள்ளி மாணவனென உனை
யாரும் நம்புவதில்லையாம். ! 

இந்த வயதில் 
இந்த எழுத்து எழுச்சி...!
சொல்லுகிறது தமிழ்மொழியில்
நீ கண்ட பயிற்சி..!
இனியெப்போதும் இருந்திடவேண்டாமப்பா
வளர்ச்சியில் ஓர் அயர்ச்சி...!

இன்று உன் பிறந்தநாள்...
எனக்கு மகிழ்ச்சி..!

வாழ்த்துக்கள்
என் இளைய கம்பனே..!
என் குட்டி பாரதியே..!
மரபுக்கவி இளவரசனே..!

வாழ்க .! நீடுழி வாழ்க...! 

***


-அன்பு அண்ணன்.

இரா.சந்தோஷ் குமார். 

நாள் : 22-Oct-15, 10:10 am

மேலே