எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தொட்டேன் ஐநூறு. தொடர்வேன் உங்களோடு. ” மாண்டவன் மலருகிறான்...

தொட்டேன்
ஐநூறு. தொடர்வேன் உங்களோடு.



 



மாண்டவன் மலருகிறான்.எழுத்து. காம் இணையத்
தளத்தில் நான் பதிவுசெய்
500 வது கவிதைத் தலைப்பு இது.




இதென்ன 500 என்பதெல்லாம் பெரிய
விஷயமா
?
இதற்கெல்லாம் ஏனிந்த
ஆர்பாட்டம் தம்பட்டம் என தோழர்கள் யாரேனும் நினைக்க கூடும். ஆம் ! ஆர்பாட்டம்
தம்பட்டம் தான்..!




என்னில் பிறந்திட்ட
சிந்தனைகளை கவிதையாக்கமாக எழுதுவது வரம். கவிதை எழுதுவது என்பதே எனக்கொரு தவம்.
இவ்வரமும் தவமும்.. எழுத்து தளத்தில் எழுதிய முதல் கவிதையிலிருந்து படிப்படியாக
அனுபவப்பாடமாக பெற்ற
பிரசாதம்தான்.



தமிழிலக்கணம் முழமையாக
அறிந்தவனில்லை. இலக்கியத்தை நுணக்கமாக வாசிக்கும் வாசிப்புக்கலையும் பெற்றவனில்லை.
ரசனையென்பது இயற்கையாகவே என்னுள்ளிருந்தது.. ரசிக்கத்தெரியும்..ரசனையின்
பாதிப்பில்
ஒரு ரசிகனாக நானெழுத ஆரம்பித்தேன். எழுத எழுத எழுத்து தள தோழர்கள்
பலரும் பலவாறு பலவிதமாக கொடுத்திட்ட ஊக்கக் கருத்துகளினாலும்
வீரிய
விமர்சனங்களினாலும் கவிதைக்கான நுட்பம் கற்றேன்.. நுணக்கம் கற்றேன் .. என்
திறமையறிந்து நானே வணக்கம் வைத்தேன்.




கவிதையில்
உட்படுத்தக்கூடிய சொல்லாடல்
, நவீனத்துவம், உவமை,உருவகம், படிமம் , குறியீடு என்பன போன்ற பல சங்கதிகளை இன்னும் முழுமையாக அறியாவிட்டாலும்..
கவிதையின் பல வடிவங்களை தெரிந்திருந்தாலும்
, ஹைக்கூ, லமரிக், லிமரைக்கூ ஆகிய கவிதை வடிவங்களில் மட்டும்
எழுத முயற்சித்திருக்கிறேன். சில வடிவங்களில் தேர்ச்சி பெற்று வருகிறேன்..
மரபுக்கவிதையெழுத பயிற்சி செய்து வருகிறேன்.
எவ்வாறினும் ...
வார்த்தை கட்டமையமைப்புக்கு சுதந்திரம் தரும் புதுக்கவிதையில் ஏதோ ஒரு
தனித்துவத்தை நான் பெற்றுவருகிறேன் எனும் ஒரு திருப்தி எனக்கிருக்கிறது.



500 என்பது இமாலய
இலக்குதான் எனக்கு. இந்த ஐநூறை என்றோ எட்டியிருக்க கூடும்.
முதிர்ச்சியற்று..சில
தனிப்பட்ட விருப்பு வெறுப்பினால்
உணர்ச்சிவயப்பட்டு எழுதிய 50 க்கும் மேற்பட்ட
கவிதைகளை
 நானும் வேறு யாரும் வாசிக்க தேவையிருக்க
கூடாது என்பதற்காவே நானே அழித்துவிட்டேன்.




இந்த 500 வது எண்ணிக்கை தொடும்வரையிலும் கவிதையினால் உண்டான அல்லது உருவாக்கிய
உறவுகளாலும் பல விரும்புத்தகும்
, விரும்பத்தகாத சம்பவங்களையும் கடந்து வந்திருக்கிறேன். இந்த 500 க்குள். இந்த 500 எனக்கு ஒரு புத்த
நிலையும் கொடுக்கவிருக்கிறது. சரியோ
, தவறோ.. எனது ஒரு சில படைப்புகளில் என்னை
நான் கட்டமைத்திருக்கிறேன்.
தனிப்பட்ட ஒரு வகைமைக்குள் எழுதியதெல்லாம் இலக்கியத்திற்கு
உட்படுத்தக் கூடாது என்பதில் தெளிவாக
இருந்தாலும். ’கவிதையின் குரல் என்பதே
தனிமையானதுதான். இக்குரலுக்கு அந்தரங்கம் உண்டு. அந்தரங்கம் என்பதால் தான்
பலருக்கும் கவிதை வாசிக்க ஈடுப்பாடு உண்டாக்கியிருக்கும்
‘.  என
மேற்கோள் ஒன்றினை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
. எதுவாக இருப்பினும்...500 என்று மார்தட்டி ஒரு
சாதனையாக நான் பிரகனப்படுத்த விரும்பவில்லை.
ஏனெனில் இன்னும் நான்
இலக்கியக் கோட்டையின்
நுழைவாயிலில் தான் காத்திருக்கிறேன். நுழைவுச்சீட்டும் என்னிடம்
தான் இருக்கிறது
, ஒரு நாள் செல்வேன். சாதிப்பேன். தன்னம்பிக்கையும் , மன உறுதியும்
இருக்கிறது.




இவ்வாறான உத்வேகத்தை..
இலக்கியத்தில் தடம்பதிக்க தன்னம்பிக்கையை
கொடுத்த களமான எழுத்து இணையத் தளத்திற்கும். எழுத்து தளத்தின் படைப்பாளத்
தோழர்கள்
,
எனது மதிப்பிற்குரிய
மானசீகமான ஆசான்கள்
, இலக்கிய முன்னோடிகள், தமிழ் அறிஞர்கள் , ஊக்குவிப்பாளர்கள்..என
அனைவருக்கும்
நன்றி தெரிவிக்கும் நேரமிது. நன்றி தெரிவிக்கிறேன். நன்றி...!
நன்றி....!
நன்றி..!



 **


இரா.சந்தோஷ் குமார். 

நாள் : 15-Nov-15, 3:39 pm

மேலே