எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் கூந்தல் நிறத்துடன் போட்டியிட்டு தோல்வியால் கார்மேகம் அழுகிறது,...

உன் கூந்தல்
நிறத்துடன் போட்டியிட்டு தோல்வியால் கார்மேகம் அழுகிறது,



 



உன் முகம்
பார்த்த பின்பு தனக்கு  வேலையில்லை என்று நிலா
கீழே விழுகிறது,



 



உன்
குரல் கேட்ட பின்பு குயிலும் மௌன விரதம்,



 



உன் நடை
கண்ட பின்பு தோல்வியை ஒப்புகொண்டது பரதம்,



 



உன் கூந்தலை
சேரும் நம்பிக்கையில் பூக்கள் எல்லாம் பூத்ததடி,



 



உன் நிறம்
தன்னிடம் இல்லாததால் வான்வில்லும் தோத்ததடி,



 



உன் மச்ச
அழகு வெளியே தெரிந்தல் நட்சத்திரம் இனி செயற்கை,



 



உன் மிச்ச
அழகை சொல்ல வேண்டாம் என என்னிடம் வேண்டுகோள் விடுத்தது இயற்கை…..

பதிவு : vinothhasan
நாள் : 28-Nov-15, 2:09 pm

மேலே