ஏ ஆங்கிலமே, என் மொழி தமிழ், எழுத்துகளை மறந்தாலும்...
ஏ ஆங்கிலமே,
என் மொழி தமிழ்,
எழுத்துகளை மறந்தாலும் தமிழ் என் தாய் மொழி,
எழுத தெரிந்தாலும் நீ என்றும் எனக்கு கை வலி.
திட்டி திட்டி எழுப்பினாலும் என் தாய் தமிழில் எழுப்புவது எனக்கு முத்தம்,
என் காதலி கொஞ்சி சொன்னாலும் “ Good morning” என்பது எனக்கு சத்தம்…..
தமிழுக்கு எதிராய் கவிபாட நீ புது இலக்கியத்தை தொடங்க வேண்டும்,
தமிழ் வரலாற்றை எடுத்து சொன்னால் நீ தமிழ் கால் அடியில் அடங்க வேண்டும்.
என் பாரதியின் கவி சொல்லும் முத்தமிழின் அழகு ,
நான் சொல்வதை புரிந்து கொள்ள நீயும் கொஞ்சம் தமிழ் பழகு.
நீ உலகம் முழுதும் பரவியது எனக்கு ஒரு ஆச்சர்ய கேள்வி,
தமிழுடன் மோதிப்பார் நீ சந்திப்பாய் முதல் தோல்வி.
எங்கள் பாட ஏட்டில் எழுத்துக்களாய் வழ்வதுதான் உனக்கு மிச்சம்,
எங்கள் தமிழ் பிறந்த தினம் அறிந்தால் உனக்கு வரும் அச்சம்.
எனக்கு எதிராய் போட்டியிட உன்னிடம் உள்ளதா இலக்கியங்கள் ஏதும்,
உன்னிடம் போட்டியிட இன்று தமிழ் பக்கம் கம்பன் தேவையில்லை நான் போதும்.
போதும் வரை படித்து விட்டேன் கட்டாயத்தில் உன்னை,
கடைசியாய் எச்சரிகிறேன் விட்டுவிடு என்னை…..