vinothhasan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vinothhasan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  17-Jan-2014
பார்த்தவர்கள்:  48
புள்ளி:  1

என் படைப்புகள்
vinothhasan செய்திகள்
vinothhasan - vinothhasan அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Nov-2015 2:09 pm

உன் கூந்தல்
நிறத்துடன் போட்டியிட்டு தோல்வியால் கார்மேகம் அழுகிறது,



 



உன் முகம்
பார்த்த பின்பு தனக்கு  வேலையில்லை என்று நிலா
கீழே விழுகிறது,



 



உன்
குரல் கேட்ட பின்பு குயிலும் மௌன விரதம்,



 



உன் நடை
கண்ட பின்பு தோல்வியை ஒப்புகொண்டது பரதம்,



 



உன் கூந்தலை
சேரும் நம்பிக்கையில் பூக்கள் எல்லாம் பூத்ததடி,



 



உன் நிறம்
தன்னிடம் இல்லாததால் வான்வில்லும் தோத்ததடி,



 



உன் மச்ச
அழகு வெளியே தெரிந்தல் நட்சத்திரம் இனி செயற்கை,



 



உன் மிச்ச
அழகை சொல்ல வேண்டாம் என என்னிடம் வேண்டுகோள் விடுத்தது இயற்கை…..

மேலும்

vinothhasan - எண்ணம் (public)
28-Nov-2015 2:13 pm

பட்சியின் பெயர் தமிழ் 


அகிலம் ஆளும் அறிவை கொண்ட அன்பு தமிழா 
நடுநிசி இரவில் தமிழ் பட்சி சொன்ன செய்தி தரவா 

நான்: பண்பை காக்கும் தமிழே நீ இரவில் பறந்து வந்ததேனோ 
விடியலை காணவிருக்கும் என் கண்களுக்கு வாழ்த்து சொல்லத்தானோ 

தமிழ்:வாழ்த்த வரவில்லை உன் தோழர்கள் வாழ்வதை கூறவந்தேன் 
பறந்து உலா வரவில்லை போர் குற்றம் எதிர்த்து படை திரட்டவந்தேன் 

நான்:அய்யகோ, உனக்காக என் வருத்தத்தை பதிவு செய்கிறேன் 
என்ன வேண்டும் கேள் என்னால் முடிந்த உதவி செய்கிறேன் 

தமிழ்:பிறந்து மண்ணை தொடும் முன்னே உன் தம்பி 
மரணம் தொடுவதை தடுக்க வருவாயோ 
கணவன் கண் முன்னே உன் தங்கை 
கற்ப்பிழப்பதை தடுக்க வருவாயோ 
வீரத்தை விழியால் சொன்ன உன் தந்தை 
இன்று வலியால் துடிப்பதை காண வருவாயோ 
வானம் அளவில் சேலை அணிந்த உன் அன்னை 
மாணம் இழந்ததால் உன் கண்களை மூடி வருவாயோ 

நான்: போதும், போதும் , தமிழே 
எனக்கு தென்கிழக்கே இன்னும் விடியவில்லை 
என்று அறிந்து கொண்டேன் 
நாம் ஒற்றுமையாய் செய்ய வேண்டியது உதவி அல்ல கடமை என்று புரிந்து கொண்டேன் 

மேலும்

vinothhasan - எண்ணம் (public)
28-Nov-2015 2:09 pm

உன் கூந்தல்
நிறத்துடன் போட்டியிட்டு தோல்வியால் கார்மேகம் அழுகிறது,



 



உன் முகம்
பார்த்த பின்பு தனக்கு  வேலையில்லை என்று நிலா
கீழே விழுகிறது,



 



உன்
குரல் கேட்ட பின்பு குயிலும் மௌன விரதம்,



 



உன் நடை
கண்ட பின்பு தோல்வியை ஒப்புகொண்டது பரதம்,



 



உன் கூந்தலை
சேரும் நம்பிக்கையில் பூக்கள் எல்லாம் பூத்ததடி,



 



உன் நிறம்
தன்னிடம் இல்லாததால் வான்வில்லும் தோத்ததடி,



 



உன் மச்ச
அழகு வெளியே தெரிந்தல் நட்சத்திரம் இனி செயற்கை,



 



உன் மிச்ச
அழகை சொல்ல வேண்டாம் என என்னிடம் வேண்டுகோள் விடுத்தது இயற்கை…..

மேலும்

vinothhasan - எண்ணம் (public)
28-Nov-2015 2:09 pm

ஏ ஆங்கிலமே,



என் மொழி தமிழ்,



 



எழுத்துகளை மறந்தாலும் தமிழ் என் தாய் மொழி,



எழுத தெரிந்தாலும் நீ என்றும் எனக்கு கை வலி.



 



திட்டி திட்டி எழுப்பினாலும் என் தாய் தமிழில் எழுப்புவது எனக்கு முத்தம்,



என் காதலி கொஞ்சி சொன்னாலும் “ Good morning” என்பது எனக்கு சத்தம்…..



 



தமிழுக்கு எதிராய் கவிபாட நீ புது இலக்கியத்தை தொடங்க வேண்டும்,



தமிழ் வரலாற்றை எடுத்து சொன்னால் நீ தமிழ் கால் அடியில் அடங்க வேண்டும்.



 



என் பாரதியின் கவி சொல்லும் முத்தமிழின் அழகு ,



நான் சொல்வதை புரிந்து கொள்ள நீயும் கொஞ்சம் தமிழ் பழகு.



 



நீ உலகம் முழுதும் பரவியது எனக்கு ஒரு ஆச்சர்ய கேள்வி,



தமிழுடன் மோதிப்பார் நீ சந்திப்பாய் முதல் தோல்வி.



 



எங்கள் பாட ஏட்டில் எழுத்துக்களாய் வழ்வதுதான் உனக்கு மிச்சம்,



எங்கள் தமிழ் பிறந்த தினம் அறிந்தால் உனக்கு வரும் அச்சம்.



 



எனக்கு எதிராய் போட்டியிட உன்னிடம் உள்ளதா இலக்கியங்கள் ஏதும்,



உன்னிடம் போட்டியிட இன்று தமிழ் பக்கம் கம்பன் தேவையில்லை நான் போதும்.



 



போதும் வரை படித்து விட்டேன் கட்டாயத்தில் உன்னை,



கடைசியாய் எச்சரிகிறேன் விட்டுவிடு என்னை…..

மேலும்

vinothhasan - நிலாசூரியன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jan-2014 12:29 pm

பொங்கல் திருவிழா கவிதை போட்டி
===============================

தோழமை நெஞ்சங்களே வணக்கம்...!

2012 ஆம் வருடம் புரட்சியாளர் சே குவேர பிறந்த தினத்தை முன்னிட்டு நமது தளத்தில் கவிதைபோட்டி போட்டி நடத்தி சிறப்பான படைப்பாளிகள் பலருக்கும் பண பரிசுகள் வழங்கி, அவர்களை கௌரவித்து மகிழ்ந்தோம்.

அதன் பிறகு 2013 கடந்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் திருவிழா கவிதை போட்டி நடத்தி, சிறப்பான படைப்பாளிகளை கௌரவித்து பரிசும் பட்டயமும் வழங்கினோம்.

அந்த வகையில் இது இரண்டாம் ஆண்டு பொங்கல் திருவிழா கவிதை போட்டிக்கான அறிவிப்பு.

அறிவிப்பு;

12 கோடி மக்கள் தொகையோடு உலகெங்கும் பறந்து விரிந்து கிட

மேலும்

பரிசு பெற்றவர்களுக்கும் பரிசுக்குரிய படைப்புகளை தேர்வு செய்தவர்களுக்கும் முன் நின்று நடத்தியவர்களுக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 14-Feb-2014 11:47 am
நன்றிகள் தோழா 02-Feb-2014 2:10 am
நன்றிகள் தோழரே.. 02-Feb-2014 2:10 am
பரிசு பெற்றோர் சிறப்பாக பனியாற்றியொர் அனைவருக்கும் மிக்க நன்றிகள் . பாராட்டுக்கள் ,வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் . 01-Feb-2014 6:54 pm
மேலும்...
கருத்துகள்

மேலே