மதிப்பெண் வேண்டாம்...... நண்பர்களுக்கு வணக்கம். எழுத்தில் மீண்டும் பரவலாக...
மதிப்பெண் வேண்டாம்......
நண்பர்களுக்கு
வணக்கம். எழுத்தில் மீண்டும் பரவலாக படைப்புகள் இடத் துவங்கியிருக்கிறேன்.
நண்பர்கள் படைப்புகளை பார்வையிடுவதும் கருத்துக்கள் சொல்வதும் என்னை சீர்படுத்திக்
கொள்ள பெரிதும் உறுதுணையாய் இருக்கிறது. தொடர்ந்து ஊக்கப்படுத்திவரும்
நண்பர்களுக்கு நன்றி.
அதே நேரத்தில்.
என்னுடைய படைப்புக்கு கருத்தோ விமர்சனமோ சொல்லும் முழு உரிமையும் உங்களுக்கு
இருக்கிறது. ஒரு கதையோ கவிதையோ கட்டுரையோ எழுதி முடித்த பிறகு அது எழுதியவனுக்குச்
சொந்தமில்லை. அது வாசிப்பவர்களுக்கே சொந்தம்...... என்றாலும் எனது படைப்புகளுக்கு
மதிப்பெண் யாரும் வழங்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். காரணம்...
நாம பேசிப்பேசி அலுத்துப் போன ஒன்றுதான். கருத்துக்களில் ஆஹா.. ஓஹோ... அருமை..
அற்புதம்.. என்று புகழ்ந்து தள்ளி 1ம்... 2மாக நீங்கள் கொடுக்கும் மதிப்பெண்களைப்
பார்த்தால் உங்கள் மனநிலையை எப்படிப் புகழ்வது எனத் தெரியவில்லை. நீங்கள் எதற்காக
வாசிக்கிறீர்கள்.. அந்தப் படைப்பில் என்ன புரிந்து கொண்டீர்கள்... உணர்ந்து
கொண்டீர்கள் என்பதை விடுத்து... பிரதிகளின் மூலம் அனைவருக்கும் கருத்துச் சொல்வது
எதற்காக? உங்கள படைப்புகளை விற்கத்தானே? அது இங்கு அழகாகவே நடக்கும்.
ழ ள ல க்களுக்கு
வித்தியாசம் தெரியாதவர்களும் சந்திப்பிழைகளை எழுத்து நடையாக வைத்திருப்போரும் உங்கள் சொந்த
விளம்பரங்களுக்காக வெறுமனே ஒரு கருத்தை நகலெடுத்து எல்லாப் படைப்புகளுக்கும்
இட்டு... எதை சாதிக்கப் போகிறீர்கள்..? நீங்கள் உங்கள் சாதனையாகப் பார்க்கும்...உங்களுக்கு
மிக மிக முக்கியமான மதிப்பெண்... எனக்கு ஒரு பொருட்டே அல்ல.
யாரையும் புண்படுத்தும்
எண்ணம் இல்லை...அர்த்தப் படுத்தலோடே சொல்கிறேன். நீங்கள் படிக்காவிட்டாலும்
பரவாயில்லை. தயவு செய்து எனது படைப்புகளுக்கு மதிப்பெண் கொடுக்காதீர்கள். எனக்குப்
பரிசு வாங்க வேண்டும் என்ற எண்ணம் எல்லாம் இல்லை.
புரிதலுக்கு நன்றி.