எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வருன பகவானே உனை வஞ்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை, என்ன...

வருன பகவானே உனை வஞ்சிப்பதில் எனக்கு உடன்பாடில்லை, என்ன செய்துவிட்டாய்???!!!! உன் வழி(லி)களையும் வாழ்விடங்களையும் அடையாளம் காட்டி விட்டாய்-ஆக்கிரமிப்பு செய்த எங்களுக்கு, இழந்தோம் ஒருமையில்- ஒவ்வொருவராய், இனைந்தோம் பண்மையில்-ஒவ்வொருவருமாய், சேதங்களுக்கு மத்தியில் வீன்(வி)வாதங்கள் செய்யாது கரங்கள் நீட்டி நம்பிக்கை விருட்சமிட்டு விருந்தோம்பிய நல் உள்ளங்களை கண்டோம் ஏராளம்-பின் எப்படி வஞ்சிப்பேன் உனை, வாழ்வாதாரம் இழந்த போது சோர்ந்து வீழவில்லை, வாழவே மீண்டும் சேர்ந்து எழுந்து கொண்டோம் - அப்படியிருக்க எப்படி வஞ்சிப்பேன் உனை, மத வெறி மாக்களே மாண்டு போனதா உங்கள் தாகம், கோவிலிலும் தொழுவோம், பள்ளிவாசலிலும் மன்றாடுவோம், பேரிடர் கூட எங்கள் பெருமைகளை வெளிக்கொனரவே வந்ததோ!!!!!  கார் மேகம் கூட உங்கள் வசை மொழி கேட்டு தான் அழுது தீர்த்ததோ!!!! எம்மதமும் சம்மதம்..... 
எவன் எது செய்தும் பிரியோம்....... இவன் 
......... தமிழ் ........... 

நாள் : 10-Dec-15, 12:31 pm

மேலே