எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

Normal 0 false false false EN-US X-NONE...



ஊர்கூடி தேர் இழுப்பது வழக்கம்தான். ஆனால் ஊரே கூடி ஒருங்கிணைந்து, மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சப்பாத்திகளை செய்ததை பெருமையாய் பேசவில்லை. மற்றவர்களுக்கு ஒரு பேரிடர் வந்துவிட்டால் இன, மத, மொழி கடந்து மனித நேயம் எப்படிச் செயல்படும் என்பதை நிரூபித்திருக்கிறது என்பதைச் சொல்லவே இந்த எண்ணம். அதோடு மட்டுமில்லாமல் அரசியலால் பிரிந்திருந்த மனிதர்கள் எல்லோரும் தாங்களாகவே முன்வந்து உதவிக்கு இணைந்த ஆச்சரியத்தையும் சொல்லவே இந்த எண்ணம். நண்பர் குழுவோடு சேர்ந்து சிறு அளவில் மூன்று முறை பிஸ்கட், ரொட்டி, பால்பவுடர், தண்ணீர் பாட்டில்கள் என கடந்த சில நாட்களாக கொடுத்துக்கொண்டிருந்த எங்கள் நண்பர் வட்டம், இந்த முறை சப்பாத்திகள் தயாரிக்கும்
பணிக்காக தயாரானது. 6 பேரோடு ஆரம்ப பணியில் ஆரம்பித்த இப்பணி 20 நிமிடங்களில் ஒவ்வொருவராக சேர ஆரம்பித்து 1 மணி நேரத்தில் கிட்டத்தட்ட முழு கிராமமுமே இறங்கிவிட்டது. ஊருக்கு நடுவில் உள்ள கோயில் வளாகத்தில் ஒரு பெரிய குடத்தை துணியால் கட்டி
மழை நிவாரணத்துக்கு உதவுங்கள்என்று எழுதிவிட்டு அதே கோயில் வளாகத்தில் ஆரம்பமானது சப்பாத்திக்கான பணிகள்.


சுகாதாரம் மிகவும் முக்கியம் என்பதில் குறிக்கோளோடு இருந்த ஒட்டு மொத்த ஊரே கையுறைகளை அணிந்தபடி  களத்தில் இறங்கியது.கோதுமை மாவை உருட்டித் தர வயதான ஆண்கள் பெண்கள் குழு.அதை வட்டமாக அழுத்தித்தர இளைஞர்கள் குழு. அந்த வட்ட சப்பாத்தியை சுட்டெடுத்துத் தர பெண்கள் கூட்டம்.அதை ஆறவைத்து எடுத்துத் தருவதற்கு பள்ளி மாணவர்கள் அதற்கு தொட்டு சாப்பிட தக்காளி வெங்காய புளிக்கலவை செய்ய பெண்கள் குழு. ஆற வைத்தபின் அதை சரியான அளவில் நிரப்பிய பாக்கெட்டுகளை தயார் செய்ய மற்றொரு பெண்கள் குழு.அந்த தக்காளி வெங்காய பாக்கெட் மற்றும் 4
சப்பாத்திகளடங்கிய பொட்டலத்தை சீலிங் செய்ய ஆண்கள் குழு.அதை பெட்டிகளில் அடைக்க நடுத்தர ஆண்கள் குழு என ஊரே உதவி செய்ய வந்ததைப் பார்க்கும்போது
என்றும் இறப்பதில்லை மனித நேயம் என்பதை எடுத்துக்காட்டியது.அரசியலால் பிரிந்திருந்த கிராம மக்கள் ஒரு அணியாய் உதவி செய்ததை மறக்க முடியாது இதுவே நிரந்தரமாக வேண்டும். எந்த சக்தியும் எங்களைப் பிரித்து விடக்கூடாது என அனைவரும் மனதுக்குள் நினைத்துக் கொண்ட மகத்தான நேரம் இதுவே. பெட்டிகளை அடுக்கும்போது அனுப்பும் சப்பாத்திகள் எந்தவித தடங்கலும் இல்லாமல் பசிக்கும் மனிதர்களுக்கு சென்று சேரவேண்டும்என்று வேண்டி அதை அனுப்பி வைத்தோம். ஊர் கூடி மனதார வேண்டி அனுப்பி வைத்த அவை நிச்சயம் அவர்களின் பசியை போக்கும் என்ற நெகிழ்ச்சியான மனதோடும் இனி இதுபோன்ற பேரிடர்கள் எங்கும் நடக்கவேண்டாம் என்ற வேண்டுதலோடும் நிறைவடைந்தாலும்,எங்களின் அடுத்த கட்ட உதவிப்பணிகள் இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.



நாள் : 10-Dec-15, 10:27 pm

மேலே