எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோழமைகளுக்காக மகாகவி ஈரோடு தமிழன்பன் ஐயாவின் சில கஜல்கள்........

தோழமைகளுக்காக மகாகவி ஈரோடு தமிழன்பன் ஐயாவின் சில கஜல்கள்.....
எனையேந்தித் தெருத்தெருவாய் எந்தவினாப் போகும்?
என் வாழ்க்கை விடைபெறுநாள் விடையொன்று தருமா?
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.25)
பாதையில்லா ஊருக்குள் துடிக்குமென்றன் ஆன்மா
பயணங்கள் கல்லறைக்குள் உள்ளதென்ன சுகமா?
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.25)
காத்திருப்பு
காத்திருந்த நேரம்தான் இறந்திருந்த நேரம்! – உன்னைக்
கண்டவுடன் வந்ததுநான் பிறந்துவந்த நேரம்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.37)
நினைவுகள்
நினைவுகள்மேல் மறதிகள்போல் நானேதான் நடந்தேன்
விழிப்புகள்மேல் துயில்கள்போல் நானேதான் கடந்தேன்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.39)
பிரிவு
நினைவோடு வாழ்வதுமோர் சுகம்தான்என் மனமே! அந்த
மனம்இறந்து வாழ்வதுமோர் சுகம்தான்என் நினைவே!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.45)
வார்த்தையின்மை
எதுசொல்ல நினைத்தாலும் அதுசொல்ல வார்த்தை
ஏதுமில்லா வெட்டவெளி இதயம்நான் அடைந்தேன்
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.39)
முதற்காதல்
ஒருமலரே போதுமெனச் சொல்லட்டும் உலகம்!
உன்முகமே போதுமென்பென் வருமோடி கலகம்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.41)
மறதி
மறதிவழி நடந்துவந்தா என்னிடத்தில் சேர்ந்தாய்
நினைவுவழி வெளியேறி எங்கேபோய்த் தீர்ந்தாய்?
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.43)
காதலின் வழி இறைவனை அடைதல்
சலங்கைகளை உதறிவிட்டு
மேடையிலே நாட்டியங்கள் விழுமே தடுமாறி
காயத்துள் நான்நடந்து
திரும்புகையில் போனதென்றன் வீடு இடம்மாறி
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.55)
சொர்க்கம் நரகம்
வாழ்க்கை தந்த வார்த்தை கொண்டு
கவிதை ஒன்று புனையலாம்!
அர்த்தம் சொர்க்கம் நரகம் என்று
கருத இருளில் நனையலாம்!
(ஈரோடு தமிழன்பன், கஜல் பிறைகள், ப.101)

நாள் : 12-Dec-15, 9:20 pm

மேலே