எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ரோஷிஷ் மான் எனும் தோழர் நம் தளத்தில் கஜல்...

ரோஷிஷ் மான் எனும் தோழர் நம் தளத்தில் கஜல் இலக்கணம் ஒட்டி படைத்துள்ள கஜல் இது . இசைக்கான சந்தமும் அளித்துள்ளார் . அவருக்கு நம் வாழ்த்துக்களை அளிப்போம் வாரீர்.


கஜல் 20

எந்தனுள்ளம் வேண்டி எண்ணும் காதலின்பம் ஊட்டவா 
வாழ்வு என்னும் ஓவியத்தை அன்பினாலே ஆக்கவா 

என் அசைவும் உன் அசைவும் சேர வேண்டும், நேசமே 
இன்னிசையாய் கேட்க்க ஆசை யாழினை நீ மீட்டவா 

காதலர்கள் தோற்பதில்லை என்று சொல்லும் காலமே 
தோன்ற வேண்டும், காதலுக்கோர் வெற்றி வாகை சூட்டவா 

இன்னலையும் சாம்பலாக்கும் சக்தியும் உண்டல்லவா? 
காதலும் தீ ஆகுமன்றோ? இன்றதை நீ மூட்டவா 

காவியங்கள் எத்துனையோ வந்த பின்னும் எங்குமே 
கண்டிறா ஆனந்த மென்னும் காட்சி ஒன்றை காட்டவா 


பஹர் ( சந்தம்): ஃபாயிலாதுன் ஃபாயிலாதுன் ஃபயிலாதுன் ஃபாயிலுன்


பதிவு : agan
நாள் : 19-Dec-15, 5:15 pm

மேலே